சக்களத்தி சண்டையில் குடும்பத்தையே உயிருடன் எரித்துக்கொன்ற முதல் மனைவி

 
f

கணவரின் இரண்டாவது மனைவியுடன் நடந்த சண்டையில் கடும் ஆத்திரத்தில் இருந்த முதல் மனைவி,   கணவர், அவரின் இரண்டாவது மனைவி, மாமியாரையும் மண்ணெண்ணெய்  ஊற்றிக் கொளுத்திவிட்டு தனக்குத்தானே மண்ணெண்னெய் ஊற்றி எரித்துக் கொண்டிருக்கிறார்.   இந்த அதிர்ச்சி சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்திருக்கிறது.

 பீகார் மாநிலத்தில் தர்பங்கா மாவட்டம் .  இம்மாவட்டத்தில் ப்ரௌல் நகரின் ஷேக்பூர் தோலா பகுதியில் இன்று காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4  பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.  40 வயது ஆண்,  அவரது இரண்டு மனைவிகள்,  அவரது தாயார் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

 சம்பவம் குறித்து அறிந்த போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.  அப்பொழுது 4 பேர் தீ விபத்தில் உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது. குர்ஷித் ஆலம்(40) என்பவர் குல்சன் கதும் என்பவரை திருமணம் செய்திருக்கிறார்.   தம்பதிக்கு வெகு நாட்களாக குழந்தை பிறக்கவில்லை என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரோஷன் காதும் என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் குர்ஷித்.

po

அண்மையில் ரோஷன் கருவுற்றிருக்கிறார்.  இதனால் முதல் மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.  இதனால் அவர் அடிக்கடி ரோஷனுடன் வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார்.   மாமியார் ஜூபைதாவும் ரோஷனுக்கு தான் ஆதரவாக பேசி வந்திருக்கிறார்.  இரண்டாவது மருமகள் கருவுற்றிருந்ததால் அவர் மீது மாமியார் அக்கறை கொண்டு நடந்திருக்கிறார்.

 நேற்று இரவு குல்சனுக்கும் ரோஷனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இதில் மாமியார் மட்டுமல்லாது கணவர் குர்ஷித்தும் ரோஷனுக்கு ஆதரவாக பேசியதால்,   கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் குல்சன்.  தனக்கு இத்தனை நாட்களாகியும் குழந்தை பிறக்கவில்லை.   இரண்டாவதாக வந்த மனைவிக்கு கருவுற்றிருந்ததால்  மன உளைச்சல் வேறு,  அதில் கணவனும் மாமியாரும் தனக்கு ஆதரவாக இல்லாத நிலை வேறு,  மன உளைச்சலை அதிகப்படுத்தி இருக்கிறது.

 இந்த நிலையில் குடும்பத்தையே பழிவாங்க நினைத்திருக்கிறார் குல்ஷன்.    இன்று அதிகாலையில் தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்ட அவர்,  தன் கணவன் மீதும்,  மாமியார் மீதும்,  தன் கணவனின் இரண்டாவது மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி இருக்கிறார்.  யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீயை வைத்திருக்கிறார்.  இதில் நான்கு பேரும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர் .

சாதாரண குடும்பச் சண்டையில் ஒரு குடும்பமே தீக்கிரையான சம்பவம்  தர்பங்கா மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும்,  அதிர்ச்சியினையும் ஏற்படுத்தி இருக்கிறது