கணவருடன் உறவு வச்சிருந்த டீச்சரை தீர்த்துக்கட்டிய பெண் கவுன்சிலர்

 
p

இந்தி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.  அவருடன் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கணவருடன் கள்ள உறவு வைத்திருந்ததால் கொலை செய்தது அம்பலமாகி இருக்கிறது.

 கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு டவுன் பகுதியில் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது.   இப்பள்ளியில் இந்திய ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் சுலோச்சனா.   கணவர் இறந்து விட்டதால் பள்ளியில் உள்ள வீட்டில் சுலோச்சனா மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

rr

 கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்திருக்கிற தகவல் அறிந்த நஞ்சன்கூடு போலீசார்  உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.   பிரேத பரிசோதனை அறிக்கையில்,  கழுத்தை நெரித்து சுலோச்சனா கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது .   கவுன்சிலர் உள்பட 4 பேரும் வீட்டிற்குள் புகுந்து கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார்கள்.

இதை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்ததில் நஞ்சன்கூடு பாஜக கவுன்சிலர் காயத்ரியும் அவரது உறவினர்கள் மூன்று பேரும் சிக்கி இருக்கிறார்கள்.  அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் ஆசிரியை சுலோச்சனாவே தாங்கள் கொன்றோம் என  ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

 தனது கணவர் முருகேசனுக்கும் ஆசிரியை சுலோச்சனாவுக்கும் கள்ள உறவு இருந்தது என்றும்,  எவ்வளவோ கண்டித்து  சுலோச்சனாவும் கணவரும் கேட்காததால் ஆத்திரம் அடைந்து உறவினர்கள் குமார், நாகம்மா, பாக்யா ஆகியவுடன் சேர்ந்து சுலோச்சனாவே தீர்த்து கட்டினேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார் காயத்ரி. 

சுலோச்சனாவின் வீட்டிற்குள் புகுந்து அவரை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கவுன்சிலர் உள்பட நாலு பேரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.