மந்திரவாதி கும்பலுடன் சேர்ந்து மகளை நரபலி கொடுக்க குழிதோண்டிய தந்தை - தப்பியோடிய சிறுமி

 
na

புதையலுக்காக மந்திரவாதி கும்பலுடன் சேர்ந்து தன் மகளை நரபலி கொடுக்க முயன்றிருக்கிறார் தந்தை.   அவர்களிடம் இருந்து தப்பித்து சென்று போலீசில் தஞ்சம் அடைந்து இருக்கிறார் சிறுமி.   மகாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மால்  மாவட்டத்தில் இந்த சம்பவம்  அரங்கேறி இருக்கிறது.

 அம்மாவட்டத்தில் பாபுல்காவ் தாலுகாவைச் சேர்ந்த 18 வயது சிறுமி,   மட்னி கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்திருக்கிறார்.  அண்மையில் தனது வீட்டிற்கு வந்து இருக்கிறார்.   அச்சிறுமியின் தந்தை பல நாட்களாகவே புதையலுக்காக வீட்டில் மாந்திரீக சடங்குகளை செய்து வந்திருக்கிறார்.

na

 கடந்த 25 ஆம் தேதி அன்று மந்திரவாதி சிலருடன் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.   18 வயது சிறுமியை வைத்தும் சடங்குகளை செய்திருக்கிறார்.  அதன் பின்னர் அந்தப் த சிறுமியை நரபலி கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.  இதற்காக தந்தை உட்பட அந்த மந்திரவாதி கும்பல் 9 பேர் குழி தோண்டி இருக்கிறார்கள்.  பின்னர் குழுயின் முன்னே அந்த சிறுமியை அமரவைத்து சடங்குகளை நடத்தி இருக்கிறார்கள்.

 இதைக்கண்டு அதிர்ந்து போன சிறுமி,  தன்னை உயிருடன் நரபலி கொடுக்க முயற்சி நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.  தனது தோழியின் வீட்டிற்கு சென்ற சிறுமி,   நடந்த விவரத்தை தோழியின் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார்.  இதை கேட்டு அதிர்ந்து போன அவர்கள் பெற்ற தந்தையை பதிவு செய்யலாமா என்று கொதித்தெழுந்து,  போலீசில் சிறுமியை அழைத்துக் கொண்டு போய் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

உடனே, யவத்மால்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  உத்தரவில்,  போலீசார் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.  அப்போது சிறுமியை நரபலி கொடுக்க முயன்றது உறுதியாகியிருக்கிறது.   இதையடுத்து சிறுமியின் தந்தை,  மந்திரவாதி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 பிடிபட்டிருக்கும் 9 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திலீப் புஜ்பால் இது மாதிரியான சம்பவங்கள் இனி மீண்டும் நடைபெறாமல் இருக்க தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.