அந்த இளம்பெண் சொன்னபடியே வீடியோ காலில் நிர்வாணமாக நின்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

 
v

இளம் பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய அந்த இளைஞன் அதன் பின்னர் அந்த பெண்ணிடமும் அந்த இளம் பெண்ணைச் சேர்ந்த கும்பலிடமும்  சிக்கி படாத பாடு பட்டு இருக்கிறார் 5 லட்சம் ரூபாய் அந்த கும்பலிடம் பணத்தை இழந்த பின்னர் போலீசிடம் சென்று கதறி இருக்கிறார்

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு பனசங்கரி உதய்நகரை சேர்ந்த ஒரு இளைஞர் வாட்ஸ் அப் கால் மூலமாக ஒரு இளம் பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்திருக்கிறார். அந்தப் பெண் ஒரு கட்டத்தில் நிர்வாணமாக வீடியோ காலில் பேசும்படி கேட்டு இருக்கிறார்.  அந்த இளைஞரும் உணர்ச்சிவசப்பட்டு அந்த இளம் பெண் சொன்னபடியே நிர்வாண நிலையில் நின்று வீடியோ காலில் பேசி இருக்கிறார்.

bbn

 பின்னர் ஒரு நாள் அந்த இளைஞரிடம் தனக்கு பணம் தேவை என்று சொல்லி கேட்டிருக்கிறார்.  அந்த இளைஞர் அதற்கு மறக்கவே,  அன்று நிர்வாணமாக நின்று பேசிய போது எடுத்த வீடியோ இருக்கிறது.   பணம் கொடுக்காவிட்டால் உன்னை சேர்ந்தவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்பி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.  சமூக வலைத்தளங்களிலும் பரப்பி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.  இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அந்தப் பெண் கேட்ட பணத்தை கொடுத்து இருக்கிறார்.  

 மிரட்டியதும் பணத்தைக் கொடுத்து விட்டதால் தன் வலையில் விழுந்துவிட்டார் அந்த இளைஞர்  இன்று கொண்டாடிட்டு இருக்கிறார் அந்த இளம் பெண் .  அவருக்குப் பின்னால் மர்ம கும்பலே இருக்கிறது.   அந்த இளம் பெண் அடிக்கடி அந்த இளைஞரிடம் பணம் கேட்டு வந்திருக்கிறார்.   இளைஞரும் வேறு வழியின்றி அனுப்பி இருக்கிறார்.   ஒரு கட்டத்தில் தன்னால் பணம் கொடுக்க முடியாது . இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லவும் அந்த பெண்ணுக்கு பதிலாக  பல ஆண்கள் பேசி மிரட்டி இருக்கிறார்கள்.

ss

 அதற்கு அந்த இளைஞர் என்னிடம்  கொடுக்க இதற்கு மேல் பணம் இல்லை என்று மறுத்திருக்கிறார்.   உன்னை பற்றி சிபிஐயிடம் புகார் கொடுத்து இருக்கிறோம்.  வழக்கு பதிவு செய்து விட்டார்கள் என்று மிரட்டி இருக்கிறார்.   இளைஞர் அதை நம்பவில்லை என்றதும்,   சிபிஐயில் புகார் செய்திருப்பதைப் போல ஆவணங்களை அனுப்பி இருக்கிறார்கள்.   அதை பார்த்து உண்மை என்று நம்பி அந்த இளைஞர் உங்களுக்கு என்னதான் வேண்டும் என்று கெஞ்சி கேட்க,  5 லட்சம் ரூபாய் கொடுத்து விடு. உன்னை விட்டு விடுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

 இதனால் மொத்தமாக தன்னால் கொடுக்க முடியாது என்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார் .  இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் அந்த இளைஞர்.   இதில் மீண்டும் அந்த கும்பல் போன் செய்யவே இதற்கு மேல் வேறு வழியில்லை என்ற நிலையில் தான் அந்த இளைஞர் போலீசுக்கு சென்று இருக்கிறார் .  

அந்த பெண்ணிடம் பேசிய வாட்ஸ் அப் கால் எண்கள்,  பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண்கள் அனைத்தையும் போலீசில் ஒப்படைத்து இருக்கிறார்.  அவற்றை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   பெங்களூரு  தென்கிழக்கு பிரிவு சைபர் கிரைம் போலீசார்  அந்த கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.