அந்த வீடியோவை காட்டி அடிக்கடி தொல்லை கொடுத்த போலீஸ் கான்ஸ்டபிள்- கடுப்பான கணவரால் நேர்ந்த கதி

 
vv

தன் மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு அல்லாமல் அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு அதை காட்டி மிரட்டி  அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்த போலீஸ் கான்ஸ்டபிளை கடத்திச் சென்று சரமாரியாக கத்தியால் குத்தியிருக்கிறார் பெண்ணின் கணவர்.  பாகிஸ்தானில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

அந்நாட்டில் லாகூர் நகரில் போலீஸ் கான்ஸ்டபில் ஆக இருப்பவர் காசிம் ஹயாத்.   இவர் முகமது இத்திகார் என்பவரின் மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.   அப்போது அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு பின்னர்,    முகமது இத்திகார் வீட்டில் இல்லாத நேரத்தில் எல்லாம் சென்று அடிக்கடி அந்த வீடியோவை காட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். 

m

 இந்த விவகாரம் முகமது இத்திகாருக்கு தெரிய வந்ததை அடுத்து மனைவியிடம் அது குறித்து கேட்க,   தனக்கு நேர்ந்த துயரத்தைச் சொல்லி அழுது இருக்கிறார்.  இதனால் போலீஸ் கான்ஸ்டபிளை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு இருக்கிறார்.  அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியிலிருந்து காசிம் ஹயாத்தை நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து கடத்திச் சென்றிருக்கிறார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்று முகம், காது, உதடு என்று பல இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார்.  ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததும்,  அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள் .  அத்தனை கத்தி குத்திலும் உயிர் பிழைத்த காசிம் ஹயாத் தப்பித்து காவல் நிலையத்திற்கு வந்து புகார் கூறியிருக்கிறார்.  

 பின்னர் போலீசார் அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளார்கள்.  இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி விடுகின்றனர்.