கணவர், கைக்குழந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் செல்ல நினைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
m

குழந்தை பெற்றதும் கணவர் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே இருந்து தனது காதலருடன் காதலனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வந்திருக்கிறார்.   இதனால் ஆத்திரமடைந்த காதலன் அப்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து கால்வாயில் வீசி இருக்கிறார்.

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா லதா(21).  இவருக்கு சென்னையைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் உடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்திருக்கிறது.  தலைப்பிரசவத்திற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார்.  குழந்தை பிறந்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் கணவர் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே தங்கியிருந்திருக்கிறார்.

b

 அதற்கு காரணம் தனது காதலன் குமரனை அவர் இன்னமும் மறக்காமல் இருந்திருக்கிறார்.   அவரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தி வந்திருக்கிறார்.  திருமணத்திற்கு முன்னரே ரேஷ்மா லதாவும் குமரனும் காதலித்து வந்திருக்கிறார்கள்.   ரேஷ்மா லதாவின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.   இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மா லதாவை கோபிநாத்திற்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

 இதை அடுத்து குமரன் சென்னை வடபழனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். குமரனின் மனைவி தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார். திருமணம் ஆகி விட்டாலும் கூட ரேஷ்மா லதாவுக்கும் குமரனுக்கும் இடையே உறவு இருந்து வந்திருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் தான் தாய் வீட்டிற்கு சென்ற ரேஷ்மா லதா தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி குமரனை வற்புறுத்தி இருக்கிறார். திருமணமாகிவிட்ட நிலையில் மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி ரேஷ்மா லதா வற்புறுத்தியதால் ஆத்திரத்தில் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.  பின்னர் உடலை கால்வாயில் வீசிவிட்டு சென்றிருக்கிறார். 

கடந்த 22ம் தேதி அன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது.   போலீசாரின் விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்ததை அடுத்து முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.