ஓடும் காரில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி! 3 வாலிபர்கள் கைது

 
gஅ

பத்தாம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமியை ஓடும் காரில் மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.  அதை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார்கள்.  நகரத்தை சுற்றிப்பார்க்கலாம் என்று ஆசைப்பட்ட அந்த சிறுமிக்கு இந்த கதி ஏற்பட்டிருக்கிறது.  டெல்லியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 டெல்லியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் அந்த 16 வயது சிறுமிக்கு அறிமுகமான இரண்டு பேர் காரில் டெல்லியை சுற்றிப் பார்க்கலாம் என்று சொல்லி ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள்.   சிறுமியும் காரில் டெல்லியை சுற்றி பார்க்கும் ஆவலில் அவர்களுடன் காரில் சென்றிருக்கிறார்.  அந்த இரண்டு பேருடன்,  காரை ஓட்டியது  3 பேர் இருந்திருக்கிறார்கள்.

ஹ்

 மூன்று பேரும் மது அருந்தி இருக்கிறார்கள்.   சிறுமியையும் மது அருந்தச்சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.   சிறுமி அவர்களின் எண்ணத்தை புரிந்துகொண்டு   மது குடிக்க மறுத்ததால்,  கார் டெல்லி நகரத்தை  சுற்றி சுற்றி வர அந்த சிறுமையை காருக்குள் வைத்து அடித்து உடைத்திருக்கிறார்கள்.   மிரட்டி மது அருந்த அவைத்திருக்கிறார்கள்.

அதன்பின்னர் ஓடும் காருக்குள்  பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.  அந்த கார் தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகாரிலிருந்து பக்கத்து மாநிலமான  உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் காஜியாபாத் வரைக்கும் 44 கிலோ மீட்டர் தூரம் சென்று இருக்கிறது. 

 காருக்குள் வைத்து மூன்று பேரும் கூட்டு பாலில் வன்கொடுமை செய்ததோடு அல்லாமல் அதை வீடியோவாகவும்  எடுத்து இருக்கிறார்கள்.  அவர்களிடமிருந்து தப்பித்து வந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததைச் சொல்ல,  அவர்கள் போலீசுக்கு புகார் அளிக்க போலீசார் அந்த மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து  அவர்களை தேடி கைது செய்துள்ளனர்.