கொலைக் குற்றவாளி உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர்! இறுதிச் சடங்குகளை கவனித்த போலீசார்

 
m

வேலூர் மாவட்டத்தில் முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்.  48 வயதான இந்த வாலிபருக்கு திலகவதி என்கிற பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது. 
திலகவதிக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். குடியாத்தத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பதால்  சின்ன வயதிலிருந்து திலகவதியுடன் பழக்கம் இருந்திருக்கிறது. 

 பல ஆண்டுகளாக இவர்கள் கள்ள உறவில் இருந்து வந்திருக்கிறார்கள்.   குற்ற உணர்ச்சியினால் இந்த கள்ள உறவினை திடீரென்று முறித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார் திலகவதி.   ஆனால் இதை ஏற்க மறுத்த ரமேஷ்,   திலகவதி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

f

 இந்த வாக்குவாதம் முற்றியதில் திலகவதி மீது பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார் ரமேஷ் .   எரிந்து கொண்டிருந்த திலகவதி திடீரென்று ரமேசை இறுக அணைத்துக் கொண்டிருக்கிறார்.  

 அந்த விபத்தில் திலகவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.  50 சதவீத தீக்காயங்களுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்திருந்தனர் போலீசார்.

 இந்த நிலையில் ரமேஷ் அக்டோபர் 21ஆம் தேதி உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  ஆனால் அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்துள்ளனர். கடைசி வரைக்கும் குடும்பத்தினர்  உடலை வாங்க மறுத்து விட்டதால் ,  போலீசார் இறுதிச் சடங்குகளை செய்து  உடலை அடக்கம் செய்துள்ளனர்.