இடையூறாக இருந்ததால் குழந்தைக்கு எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூரத்தாய்

 
g

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தைகள் இடையூறாக இருக்கிறது என்று நினைத்து எலி பேஸ்ட் கொடுத்து இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார் அந்த கொடூரத்தாய். இதில் 9 மாத குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் . 27 வயதான இந்த வாலிபரின் மனைவி ஞானமலர்(21).  இத்தம்பதிக்கு மூன்று வயதில் பிரகாஷ் என்ற மகனும் ஆதிரா என்ற ஒன்பது மாத கைக்குழந்தையும் இருந்தனர்.

c

மகேஷ் கூலி வேலை செய்து வந்ததால் வேலை நிமித்தமாக வெளியே சென்று விடும் நேரத்தில் ஞான மலருக்கும் அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான தங்கராஜ்(28) என்கிற வாலிபருக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது .  இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. அவர்கள் மூலமாக கணவர் மாதேஷுக்கும் தெரிய வந்திருக்கிறது.

 இதனால் கடந்த 3ஆம் தேதி என்று மனைவி ஞானமலரை கடுமையாக கண்டித்திருக்கிறார்.  இதில் ஆத்திரமடைந்த ஞானமலர்,   காதலன் தங்கராஜ்க்கு  ஃபோன் போட்டு,  கணவன் கண்டித்த விஷயத்தை சொல்லி,  குழந்தைகள் இருப்பதால் வீட்டில் இனிமேல் உல்லாசமாக இருக்கவும் முடியாது என்று புலம்பி இருக்கிறார்.  இதை அடுத்து குழந்தையை கொன்று விடலாம் என்று ஞானமலரே தங்கராஜ் இடம் சொல்லி இருக்கிறார் . 

உடனே குழந்தைகளை எப்படி கொள்ளலாம் என்று தங்கராஜ் திட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறார்.  அதன்படி இரண்டு குழந்தைகளுக்கும்  எலி பேஸ்ட் வாங்கி கொடுத்திருக்கிறார் ஞானமலர்.   எலிபேஸ்ட் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்து மயக்கம் மயங்கி விழுந்திருக்கிறார்கள்.  அக்கம் பக்கத்தினர்  விசாரித்த போதுதான் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து விட்டதாக நாடகமாடி இருக்கிறார் ஞானமலர்.

இதை அடுத்து மூன்று பேரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  9 மாத கை குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஐந்தாம் தேதி உயிரிழந்திருக்கிறது.   இதன் பின்னர் மாதேஷ்,  ராயக்கோட்டை போலீசில் மனைவியும் குறித்தும் தங்கராஜ் குறித்தும் சொன்ன தகவல்களை அடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஞானமலர் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.   இதை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.