சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரன்! பாலியல் வன்கொடுமைக்கு பின் நடந்த சித்திரவதை

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த வாலிபர் அந்த சிறுமியின் வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றி சித்திரவதை செய்திருக்கிறார். தலைநகர் டெல்லியில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.
டெல்லியில் இயங்கி வரும் அந்த செருப்பு தொழிற்சாலையில் மேலாளராக இருந்து வருகிறார் ஜெய்பிரகாஷ் என்ற 31 வயது வாலிபர். இந்த தொழிற்சாலையில் 15 வயது சிறுமி ஒருவர் வேலை செய்து வந்திருக்கிறார்.
டெல்லியில் நாங்கோலாய் பகுதியில் வசித்து வருகிறார் ஜெய்பிரகாஷ். மேலாளர் என்பதால் அந்த 15 வயது சிறுமியிடம் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவரை கவனித்துக் கொள்ள உனக்கு சம்மதமா? என்று சொல்லி இருக்கிறார். சிறுமியும் தனது மேலாளர் சொல்கிறாரே என்று அவரின் வீட்டிற்கு சென்று விட்டு வேலைகளை செய்து வந்திருக்கிறார்.
கடந்த 2ம் தேதி அன்று அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் ஜெய்பிரகாஷ். இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் உன் வேலை போய்விடும் என்று மிரட்டி இருக்கிறார். ஆனால் அந்த சிறுமி பயந்து கொண்டு யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 5ம் தேதி அன்று வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்திருக்கிறார் . இப்போது நடுவழியில் வழிமறித்து அந்த சிறுமியின் வாயில் ஆசிட் ஊற்றி இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். இதில் கதறி துடித்த அந்த சிறுமி வீட்டிற்கு ஓடி மயங்கி விழுந்திருக்கிறார்.
பதறி துடித்த பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தந்தை போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற முயன்றனர் போலீசார். ஆசிட் குடித்திருந்ததால் எடுத்த உடன் சிறுமியால் பேச முடியவில்லை. பின்னர் மிகுந்த சிரமத்துடன் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் ஜெய்பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர் .
அவர் மீது பாலியல் பலாத்காரம் , போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஜெயப்பிரகாஷின் மனைவிக்கும் தொடர்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஆகவே அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் டெல்லி மகளிர் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.