மைத்துனருடன் காதல் - கணவரின் உடலில் கல்லைக்கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்

 
ll

 மைத்துனர் மீது கொண்ட காதலால் இனி கணவன் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த மனைவி பாதாம் பாலில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொன்று உடலில் கல்லைக்கட்டி ஆற்றில் வீசி இருக்கிறார்.

 ஹைதராபாத்தில் ராய் துர்க்கம் பகுதியில் கார் ஓட்டுனராக இருந்து வந்திருக்கிறார் ராக்கியா நாயக்.  வாடகை கார் ஓட்டுநராக இருந்து வந்துள்ளார் . இவரது மனைவி ரோஜா.  அவரின் மைத்துனர் சபவத் லக்பதி.   

 கார் ஓட்டுவதற்கு ராக்கியா  சென்றபோதெல்லாம் மைத்துனருடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது ரோஜாவுக்கு.   இந்த விவகாரம் மெல்ல மெல்ல ராக்கியாவுக்கு தெரிய வந்திருக்கிறது.   இது குறித்து மனைவியிடம் கேட்டு கண்டித்து இருக்கிறார். 

jo

 தனது கள்ள உறவுக்கு கணவர் இடையூறாக இருப்பார் என்று நினைத்த ரோஜா கணவரை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.  அதன்படி சம்பவத்தன்று ரோஜாவின் காதலர் சபவத்,  ரோஜாவின் கணவர் ராக்கியாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு,  வங்கி பணத்தை ஒப்படைப்பதாக சொல்லி இருக்கிறார்.   இதை அடுத்து நல்கொண்டாவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு சொல்லி இருக்கிறார்.

 இதை நம்பிய ராக்கியா ஆகஸ்ட் 24ஆம் தேதி அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று இருக்கிறார்.   அப்போது ராக்கிவுடன் சிவா என்பவரும் வருவதாக சொல்லி சென்றிருக்கிறார்.   காரில் செல்லும் வழியில் நாக்கியாவிற்கு  பாதாம் பாலை கொடுத்திருக்கிறார் சிவா.   அதில் மயக்க மருந்து கலந்திருக்கிறார்கள். இதை குடித்ததும் ராக்கியா மயங்கி விழுந்திருக்கிறார்.   அங்கு  படகோட்டி இருந்திருக்கிறார்.

 மயக்க நிலையில் இருந்த ராக்கியாவை படகில் ஏற்றி கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் சென்ற பின்னர் ராக்கியாவை மீன் பிடி வலையில் சுற்றி அவரை  தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்கிறார்கள்.  பின்னர் உடலில் கல்லைக்கட்டி ஆற்றில் வீசி இருக்கிறார்கள்.  

இதற்கிடையில்  ராயதுருக்கம் போலீசில், தனது கணவரை காணவில்லை என்று  புகார் அளித்துள்ளார் ரோஜா.  போலீசாருக்கு ரோஜா மீதுதான் சந்தேகம் இருந்தது.  அவரிடம் துருவித்துருவி விசாரித்ததில்  கணவனை கொலை செய்ய திட்டம் போட்டு கொடுத்து விட்டு போலீசாரிடம் வந்து கணவனை காணவில்லை என்று புகார் கொடுத்ததை சொல்லி இருக்கிறார்.

 இதை அடுத்து ரோஜா,  அவரது காதலர் சபவத், அவரது நண்பர் சிவா,  படகோட்டி மான்சிங் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  சம்பவம்  மூன்று வாரங்களுக்கு பின்னால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.