தன் மனைவிக்கு குழந்தை இல்லை என்று பக்கத்து வீட்டுப் பெண்ணை குத்திக்கொன்ற கொடூரம்

 
k

தன் மனைவிக்கு குழந்தை இல்லை என்று பக்கத்து வீட்டு பெண்ணை இழுத்துப் போட்டு கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார் வாலிபர்.  அந்த பெண் மாந்திரீகம் சூனியம் செய்து வைத்ததால் தான் தன் மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை என்கிற ஆத்திரத்தில் இந்த கொலையை செய்திருக்கிறார். 

 சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரியா மாவட்டம் போதி கிராமத்தில் வசித்து வருபவர் உமேஷ்.  இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது.  திருமணத்திற்கு பின்னர் இத்தம்பதிக்கு குழந்தை இல்லை.   

இந்த நிலையில்  மனைவி அடிக்கடி நோய் வாய்ப்பட்டு வந்திருக்கிறார்.   இது கணவருக்கு கடும் வருத்தத்தை தந்திருக்கிறது.   பக்கத்து வீட்டைச் சேர்ந்த கவுசிலியா தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

f

 கவுசிலியா அடிக்கடி பூஜை செய்து வந்திருக்கிறார்.  இதனால் தன் குடும்பத்தின் நிலை,   பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் பக்கத்து வீட்டுப் பெண் கவுசிலியா தான் என்று  நினைத்திருக்கிறார்.  உமேஷ் தன் மனைவிக்கு குழந்தை பிறக்க கூடாது என்று மாந்திரீகம் செய்து அமைத்து விட்டதாக சொல்லி வந்திருக்கிறார். தன் குடும்பத்தின் இந்த நிலைமைக்கு காரணமான பக்கத்து வீட்டுப் பெண்ணை தீர்த்து கட்டி விட நினைத்திருக்கிறார்.

 இந்த நிலையில் நேற்று மாலையில் ஐந்து முப்பது மணி அளவில் கவுசிலியா பக்கத்தில் இருந்த குளத்தில் குளத்தில் விட்டு  வீட்டுக்கு வந்திருக்கிறார் . அப்போது கத்தியுடன்   காத்திருந்த உமேஷ்,  நடு ரோட்டில் வைத்து  கவுசிலியாவை சரமாரியாக குத்தி இருக்கிறார்.  இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இருக்கிறார்.

 கவுசிலியாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர் . கணவரும் ஓடி வந்து இருக்கிறார் . இதை பார்த்ததும் உமேஷ் தலைமறைவாகி இருக்கிறார்.   தகவல் அறிந்து  வந்த போலீசார் கௌசிலியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 தீவிர தேடுதலை அடுத்து உமேஷை கைது செய்துள்ளனர்.  அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தன் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் தன் மனைவிக்கு குழந்தை பிறக்காமல் இருக்க இருக்கும் காரணம் அந்த பெண்தான் என்று நினைத்ததால் அவரை கத்தியால் குத்திய கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.   இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.