நள்ளிரவில் சர்ப்ரைஸ் கொடுக்க போன காதலருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதலிக்கு நேர்ந்த கதி

 
l

நள்ளிரவில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல போன காதலர் அவரை மாடியில் இருந்து பிடித்து கீழே தள்ளிவிட்டு இருக்கிறார்.  இதில் படுகாயம் அடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 சென்னையில் கேகே நகர் விஜயராகவபுரம் பகுதியில்  வசித்து வருபவர் ஆஷாராவ்(21).  இந்த பெண் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.   இவர் குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மரடொனா(31) என்ற வாலிபரை காதலித்து வந்திருக்கிறார். 

gg

இன்று செப்டம்பர் எட்டாம் தேதி ஆஷாவுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு சர்ப்ரைஸ் ஆக வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நேற்று நள்ளிரவில் ஆஷா வீட்டுக்கு கிப்ட் வாங்கிக்கொண்டு சென்று இருக்கிறார் மரடொனா.   கையில் பரிசு பொருளுடன் சர்ப்ரைஸ் கொடுக்கச் சென்ற மரடொனாவுக்கு அங்கே இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருந்திருக்கிறது . 

அவருக்கு முன்னதாக  ஒரு ஆண்  ஆஷாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருந்தார்.   இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மரடொனா,  ஆஷாவை பால்கனிக்கு அழைத்து வந்து யார் அந்த ஆண்  என்று கேட்டு வாக்குவாதம் செய்து இருக்கிறார்.   ஆஷாவுக்கும் அந்த நபருக்கும் தவறான உறவு இருப்பதாக மரடொனா நினைத்து கடும் வாக்குவாதம் செய்திருக்கிறார் .

ஒரு கட்டத்தில் ஆக்கிரமடைந்த மரடொனா,   ஆஷாவை பால்கனியில் இருந்து  பிடித்து கீழே தள்ளி இருக்கிறார்.  படு கடுகாயம் அடைந்து கிடந்த ஆஷாவை அப்பகுதியினர் மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  அங்கு ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 ஆஷா அளித்த புகாரில் கே. கே. நகர் போலீசார் மரடொனா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.