பாலியல் ஊக்க மாத்திரை சாப்பிட்ட இளைஞரின் கொடூரம் -கல்லூரி மாணவி மரணம்

 
ஹ்

பாலியல் ஊக்க மாத்திரை சாப்பிட்டு விட்டு கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த மாணவிக்கு இரத்தப்போக்கு அதிகரித்திருக்கிறது.  இதை அடுத்து அந்த இளைஞர் தப்பி ஓடி இருக்கிறார். மயங்கிக்கிடந்த அந்த மாணவி அதிக ரத்தப்போக்கினால் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் என்கிற பகுதியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவி,  குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியே இருந்துள்ளார்.  இதை கவனித்த ராஜா கௌதம் என்கிற 25 வயது இளைஞர்,  திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து அந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

ப்

 அதற்கு முன்பாக பாலியல் ஊக்க மாத்திரையை சாப்பிட்டு இருக்கிறார்.  இதனால் அந்த மாணவியை முரட்டுத்தனமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இளைஞரின் இந்த மோசமான செயலால் மாணவியின்  அந்தரங்க பகுதியில் இருந்து ரத்தப்போக்கு அதிகமாக  ஏற்பட்டிருக்கிறது.  இதனால் பயந்து போன அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.  

 ரத்தப் போக்கு அதிகமாகவும்  அந்த மாணவி மயங்கி கிடந்திருக்கிறார்.   பின்னர் வீட்டிற்கு வந்த அந்த மாணவியின் சகோதரி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி அவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்.  மருத்துவ பரிசோதனையில் அந்த மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . அதிக ரத்தப்போக்கினால்  அந்த மாணவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராஜாகவுதம்  என்கிற அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.