இனிமேல் வரவேண்டாம் என்று சொன்னதால் நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலன் செய்த கொடூரம்

 
cz

உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னோய் பகுதியில் கடந்த 19ம் தேதி  அன்று வயல்வெளியில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்திருக்கிறது.   தகவல் அறிந்ததும் போலிசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வழக்கின் விசாரணையில்  உயிரிழந்த அந்தப் பெண்ணின் பெயர் கும்கும் என்று தெரிய வந்திருக்கிறது.  அந்த பெண்ணுக்கும் விஷால் என்ற நபருக்கும் கள்ள உறவு இருந்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

kk

கும்கும் கணவர் ஹரித்துவாரில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் . இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே விஷாலுடன் கும்கும் கள்ள உறவில் இருந்து வந்து இருக்கிறார் .   இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

 திடீரென்று விசாலுடன் உறவை நிறுத்தி இருக்கிறார் கும்கும்.  இதனால் தன் நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார் விஷால்.  கும்கும்க்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று  முடிவு செய்துள்ளனர்.

கும்கும்மை வயல்வெளிக்கு தூக்கி வந்து எல்லாரும் ஒரே நேரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள் .  அதன்படி கடந்த 19ஆம் தேதி அன்று அந்த பெண்ணை வயலில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் போது,  கத்தி கூச்சல் போட்டிருக்கிறார்.  அப்போது அந்தப் பெண்  சத்தம் போட்டதால் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

 இதை அடுத்து விசாலையும் அவரது நண்பர்களையும் பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.   கள்ளக்காதல் உறவில் திடீரென்று உறவை நிறுத்தி விட்டதால் பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பிஜ்னோய் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.