2வது முறை வர மறுத்ததால் கள்ளக்காதலியை இரும்பு ராடால் அடித்து கொன்ற கொடூரன்

 
s

காப்பு காட்டில் கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த போது இரண்டாவது முறை வர மறுத்ததால் இரும்பு ராடால் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி இருக்கிறார் கள்ளக்காதலன் . இரண்டாவது மனைவி வீட்டில் தங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 தர்மபுரி மாவட்டத்தில் கீழானூர் காட்டுப்பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது.  போலீசார் சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு,  இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தபோது,  அப்பெண் சித்தேரி அடுத்த வெள்ளம் பள்ளியை பகுதியைச் சேர்ந்த பார்வதி என்பது தெரிய வந்திருக்கிறது.

k

 ஆண்டியப்பன் என்பவரை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்த கொண்டு வாழ்ந்த  பார்வதி,  கடந்த 9 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் குழந்தைகளோடு கீரை பட்டியில் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.   கடந்த ஒருவருடமாக சக்திவேலுவுடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.  

 முதல் மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் இரண்டாவது மனைவிக்கு குழந்தை இல்லாத நிலையில் பார்வதி உடன் கள்ள உறவு வைத்து வந்திருக்கிறார் சக்திவேல்.  இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கிறார்கள். 

 வழக்கம்போல் கீழானூர் காப்பு காட்டுக்குச் சென்று இருவரும் தனிமையில் இருந்திருக்கிறார்கள்.   அப்போது மீண்டும் இரண்டாவது முறை உல்லாசத்திற்கு அழைத்திருக்கிறார்.  அதற்கு வர மறுத்திருக்கிறார் பார்வதி .  வேறு ஒரு நபருடன் கள்ள உறவில் இருப்பதாக  பார்வதி மீது சந்தேகப்பட்ட சக்திவேல்,  அதனால்தான் தன்னை விரும்புவதை குறைத்துக் கொண்டிருக்கிறாரா என்று கேட்டு வாக்குவாதம் செய்து,  தான் முன்பே மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து பார்வதி முகத்தை அடித்து சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த தோடு மற்றும்  வெள்ளி கொலுசு போன்றவற்றை எடுத்துக்கொண்டு இரண்டாவது மனைவி வீட்டில் போய்  பதுங்கி இருக்கிறார் . போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.