அரசு வேலையை காப்பாற்ற பெற்றெடுத்த பெண் குழந்தையை கொன்ற கொடூர தம்பதி

 
c

 அரசு வேலையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மூன்றாவதாக பெற்றெடுத்த பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்திருக்கிறார்கள் கொடூர தம்பதியினர்.   ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

 ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு துறையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார் ஜவர்லால் மேக்வால்.  36 வயதான இந்த வாலிபருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் அவரது மனைவி கர்ப்பமடைந்து மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 

c

 மாநில அரசின் இரண்டு குழந்தைகள் திட்டத்தினால் நிரந்தர வேலை குறித்த அச்சம் தம்பதிக்கு ஏற்பட்டிருக்கிறது.   இதனால் ஜவர்லால் மேத்வால் அவரது மனைவியும் மூன்றாவதாக பிறந்த குழந்தையால் தனது வேலைக்கு பாதிப்பு எதுவும்  ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக பிறந்த ஐந்து மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்திருக்கிறார்கள்.   மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் அரசு ஊழியர்கள் கட்டாய ஓய்வு பாலிசி அந்த மாநிலத்தில் நடைமுறையில் இருக்கிறது.   இதனால் இப்படி ஒரு செயல் கொடூர செயலை தம்பதியினர் செய்திருக்கிறார்கள்.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் பிகானூர் மாவட்டத்தில் தங்களது ஐந்து மாத பெண் குழந்தையை சத்தர்கர் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உட்பட்ட கால்வாயில் வீசி கொலை செய்திருக்கிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 

இந்த சம்பவம் குறித்து பிகானேர் காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் யாதவ் விசாரணை நடத்தி தம்பதியினரை கைது செய்துள்ளனர். தங்கள் மகளை கொலை செய்த வழக்கில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நிரந்தர அரசு பணியை பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்,  உடந்தையாக இருந்த மனைவி இருவரையும் கைது செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று  தெரிவித்திருக்கிறார் .