கட்டிலுக்கு அடியில் கணவன் உடலை மறைத்து வைத்துவிட்டு ஆண் நண்பருடன் புதுப்பெண் எஸ்கேப்

 
k

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து உடலை கட்டிலுக்கு கீழே மறைத்து வைத்துவிட்டு  நண்பருடன் தலைமறைவாகி இருக்கிறார் அந்த புதுப்பெண் எஸ்கேப் ஆகி இருக்கிறார்.  திருமணமான சில மாதங்களிலேயே கணவனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கும் செயல் அவரது உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருக்கிறது.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை அடுத்த சாக்கினாக்கா.   இப்பகுதியில் வசித்து வந்தவர் நசீம்கான்.   22 வயதான இந்த இளைஞருக்கும் ரூபினா  என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.  திருமணத்திற்கு பின்னர் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்கள். 

 இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக நசீம் தான் தந்தை,  தன் மகனை பார்க்க சென்றிருக்கிறார்.  அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்தவர் போலீசாருக்கு புகார் தெரிவிக்க ,  போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது கட்டிலுக்கு அடியிலே ரத்தக்கரையுடன் அழகிய நிலையில் சடலமாக கிடந்து இருக்கிறார் நசீம்கான்.  

z

 உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார்,  அவரது மனைவி ரூபினாவை தேடி இருக்கிறார்கள்.   ரூபினாவின் செல்போன் எண்ணை  வைத்து அவரையும் அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  

 போலீசாரின் விசாரணையில் வழக்கம் போல் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்திருக்கிறது.   ஆனால் கடந்த 14ஆம் தேதி அன்று இந்த சண்டை அதிகமாக இருந்திருக்கிறது.   இதனால் சமாதானப்படுத்த தனது ஆண் நண்பரை அழைத்து இருக்கிறார்.   அந்த ஆண் நண்பர நசிமை சமாதானப்படுத்திய போது வாக்குவாதம் தடித்திருக்கிறது.   அப்போது நசீம்கானின் தலையில் உண்டியலால் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

 அதன் பின்னர் நசீம்கான் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.   பின்னர் உடலை படுக்கையறையில் உள்ள கட்டிலின் கீழே வைத்துவிட்டு இருவரும் தலைமறைவாகி இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது.  ஆனால் இதுதான் உண்மையான காரணமா என்பது குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.