காதலியை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்த காதலன்

 
a

காதலியை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜுக்குள் வைத்திருந்திருக்கிறார் காதலன்.  ஒவ்வொரு நாளும் ஒரு துண்டுகள் வீதம் 18 நாட்கள் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று வீசியிருக்கிறார் . கொலையை மறைப்பதற்காக யாரும் கண்டுபிடிக்க முடியாது என்பதற்காக இப்படி செய்து இருக்கிறார்.

 மும்பையில் பிரபல கால் சென்டரில் வேலை பார்த்து வந்திருக்கிறார் ஷ்ரத்தா.  அதே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தவர் அப்தாப் அமீன் பூனாவாலா.  இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியிருக்கிறது.   இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.  இதனால் இருவரும் மும்பையில் இருந்து வெளியேறி டெல்லி சென்று இருக்கிறார்கள் .  அங்கே வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

ச்

 தந்தையுடன் செல்போன் வாயிலாக அவ்வப்போது பேசி வந்திருக்கிறார் ஷ்ரத்தா.   சில நாட்களாக மகளிடம் இருந்து எந்த போனும் வரவில்லை என்பதால் தந்தை விகாஸ் மதன் கடந்த எட்டாம் தேதி டெல்லி சென்று இருக்கிறார்.   மகள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டி கிடந்திருக்கிறது.   தொடர்ந்து வீடு பூட்டிய கிடக்கவும் சந்தேகமடைந்த அவர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார்.  

 போலீசார் அப்தாப் அமீனை பிடித்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல்கள் வந்திருக்கின்றன.   டெல்லியில் காதலர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்தாப் அமீனை  வற்புறுத்தி இருக்கிறார்.    இதில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு இருக்கிறது.   இந்த சண்டையில் ஆத்திரமடைந்த அப்தாப் அமீன் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

 பின்னர் போலீசில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அவரது உடலை  35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜுக்குள் வைத்திருந்திருக்கிறார் .  நள்ளிரவில் வெட்டப்பட்ட துண்டுகளில் ஒவ்வொரு துண்டாக எடுத்துச் சென்று டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வீசி இருக்கிறார்.   ஒவ்வொரு நாளும் சில துண்டுகளை எடுத்துச் சென்று 18 நாட்களைப் காதலியின் உடல் பாகங்களை அப்புறப்படுத்தி இருக்கிறார்.  டெல்லி போலீசாரின் விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்தது.

 காதலியை கொன்று 35 பாகங்களாக உடலை வெட்டி பிரிட்ஜுக்குள்அடைத்து வைத்து இருந்த காதலனின் செயல் டெல்லி மற்றும் மும்பை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.