காதலி மயங்கியதும் 4 நண்பர்களுக்கு போன் போட்ட காதலன் - தைலமர காட்டில் மாணவிக்கு நேர்ந்த கதி

 
g

காதலிக்கு மது கொடுத்து மயங்க வைத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அந்த காதலன், வீடியோவாகவும் எடுத்து வைத்திருந்திருக்கிறார்.  நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் ஒருவர் அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட அது வைரலாகி தற்போது போலீசில் கைதாகி இருக்கிறார்கள். இதற்கிடையில் குழந்தை திருமணம் ஆன அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர் போலீசார். காப்பகத்தில் படித்து வருகிறார்.

 திருச்சி மாவட்டத்தில் முசிறி அடுத்த அந்தரப்பட்டி.   இப்பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்கிற 21 வயது இளைஞர்,  அதேபகுதியைச் சேர்ந்த பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவியை காதலித்து வந்திருக்கிறார்.   கடந்த ஏப்ரல் மாதம் அந்த மாணவியை காவிரி கரையோரத்தில் இருக்கும் தைலமரக்காட்டுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் .  அப்போது அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இருக்கிறார்.

v

 குளிர்பானத்தை குடித்த அந்த மாணவி மயங்கி கிடந்திருக்கிறார்.   அப்போது தனது நண்பர்கள் 4 பேருக்கு போன் போட்டு வரவழைத்திருக்கிறார் ரங்கநாதன்.  5 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  அதை  செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டிருக்கிறார்கள்.  இதைப் பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி அனுப்பி இருக்கிறார்கள்.  அதன் பின்னர் இந்த வீடியோவை காட்டி மிரட்டி இரண்டு மூன்று முறை அந்த மாணவியை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

 இதனால் சிறுமியின் நடவடிக்கை தெரிந்த மாற்றத்தை பார்த்த பெற்றோர்,  படிப்பை நிறுத்திவிட்டு கடந்த மே மாதமே அவரை திருச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு  திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.   குழந்தை திருமணம் குறித்து அறிந்த அதிகாரிகள்  ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் சிறுமியை மீட்டு திருச்சி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.  அங்கிருந்தபடியே படித்து வருகிறார்.

 இந்த நிலையில் அச்சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஒருவர் அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட , அது  வைரலாகி அச்சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இதை அடுத்து போலீசார் காப்பகத்தில் இருந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி அதன் பின்னர் சம்பந்தப்பட்ட 5 பேர் மீது  போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் .  ரங்கநாதன், மணி, தர்மன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர் .  தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.