சிறுவனை நரபலி கொடுத்தால் ஆண் குழந்தை பிறக்கும்... ஆடு மேய்த்த சிறுவனை கோயிலுக்கு அழைத்துச்சென்று வெட்டி..

 
aa

சாமியார் சொன்னபடியே ஆண் குழந்தை பிறந்து விட்டதால் நேர்த்திக்கடன் செய்ய வேண்டும் என்பதற்காக ஆடு மேய்க்கும்  சிறுவனை சாமி கும்பிடலாம் வாடா என்று கோவிலுக்கு அழைத்துச் சென்று வெட்டி படுகொலை செய்திருக்கிறார் அந்த பெண்.   போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த தம்பதியை கைது செய்துள்ளனர் . போலீஸ் சாமியாரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டம் க்யோடிகி.   இப்பகுதியைச் சேர்ந்த ராம்லால் - மாயா தம்பதிக்கு  மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் . மாயா  நான்காவது முறையாக கர்ப்பம் அடைந்திருக்கிறார்.   இந்த முறை நிச்சயம் ஆண் குழந்தை பிறந்து ஆக வேண்டும்.   இல்லையென்றால் உன்னை விவகாரத்தை செய்து விடுவேன் என்று மிரட்டி  வந்திருக்கிறார் ராம்லால்.

க்க்

இதனால் உள்ளூரில் உள்ள (போலி) சாமியாரிடம் சென்று அந்த பெண் எப்படியாவது ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டி இருக்கிறார். போலி சாமியார் சில பூஜைகளை செய்து ஆண் சிறுவன் ஒருவனை நரபலி கொடுத்தால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியிருக்கிறார்.   அப்படியே செய்கிறோம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார் அந்த பெண்.

போலி சாமியார் சொன்னதை கணவர் ராம்லாலிடம் சொல்ல, எந்த சிறுவனை பலிகொடுப்பது? எங்கே இருந்து பிடிப்பது? என்று திட்டம் போட்டு இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்து இருக்கிறது.   பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது .  இதனால் மகிழ்ந்த அந்த தம்பதி நேர்த்தி கடனை நிறைவேற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

 அந்த ஊரில் ஆடு மேய்க்கும் சிறுவனிடம் சென்று சாமி கும்பிடலாம் வா என்று சொல்லி கோவிலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.  முன்கூட்டியே வைத்திருந்த கத்தியை எடுத்து வி மாயா அந்த சிறுவனை வெட்டி  படுகொலை செய்திருக்கிறார் .  கடந்த ஜூலை 6ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

 சிறுவனை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் தேடி இருக்கிறார்கள்.   காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறார்கள்.   போலீசாருக்கு வந்த சந்தேக தகவல் அடிப்படையில் அந்த கோவிலுக்கு சென்று பார்த்த போது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது.   அதன் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தபோதுதான் ராம்லால் - மாயா தம்பதி சிக்கியிருக்கிறார்கள்.   அவர்களை கைது செய்துள்ள போலீசார் அந்த போலி சாமியாரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.