மாணவியை கட்டாயப்படுத்திய வாலிபர் சிறையிலடைப்பு - மனைவியும் சிறையிலடைப்பு

 
bb

பிளஸ்-2 மாணவியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய வாலிபரும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அடுத்த நெகமம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வரும் 17 வயது +2  மாணவி.  இவரை  அதே பகுதியில் இருக்கும் காளியப்பன் என்கிற 31 வயது வாலிபர் அந்த மாணவியிடம் காதலிப்பதாக சொல்லி தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.  கானியப்பனுக்கு திருமணமாகி மனைவி உண்டு.

aa

 காளியப்பன் மனைவி மகாலட்சுமி தனது கணவரை பள்ளி மாணவி காதலிப்பதாக நினைத்து மாணவியை அவமானப் படுத்தியும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் சொல்ல அழ,  பொள்ளாட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.   இந்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஒரு நிலையில்,   கானியப்பன் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதும்,    அவர் மனைவி மகாலட்சுமி மாணவியிடம் இதனால் தவறாக பேசியதும் தெரிய வந்திருக்கிறது.

 இதை அடுத்து காணியப்பனையும் அவரது மனைவி மகாலட்சுமியையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.   இருவரையும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.