போகும் வழியில் இறக்கிவிடுவதாக சொன்ன முதலாளி- ஓடும் காரில் இருந்து குதித்த இளம்பெண்

 
c

 இரவு நேரம் என்பதால் தனியாக போகாதே.  என் காரில் ஏறிக்கொள் போகும் வழியில் இறக்கி விடுகிறேன் என்று முதலாளி சொன்னதை  நம்பி காரில் ஏறிய அந்த இளம் பெண்ணுக்கு இரட்டை அர்த்த வார்த்தைகளும் , ஆபாச பாலியல் சீண்டல்களும் தாங்க முடியாத அளவிற்கு இருந்திருக்கிறது .  ஓடும் காரில் இருந்து குதித்த அந்த இளம் பெண்ணை சாலையில் சென்ற பொதுமக்கள் காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோவில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 லக்னோவில் 40 வயது உடைய அந்த நபர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்.   கடந்த சில தினங்களுக்கு முன்பாக கடைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்திருக்கிறார்.   அந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு 21 வயது இளம்பெண் ஒருவர் வேலை கேட்டு வந்திருக்கிறார்.   அந்த இளம் பெண்ணை உடனே வேலைக்கு  சேர்த்து இருக்கிறார்.

df

 வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு அந்த இளம்பெண் வீட்டுக்கு புறப்பட்டு இருக்கிறார்.   அப்போது கடையின் முதலாளி காரில் ஏறிக்கொள் உன்னை போகும் வழியில் இறக்கி விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.  அதற்கு அந்த பெண் தயங்கி கொண்டு வேண்டாம் முதலாளி என்று மறுத்திருக்கிறார். இல்லை இரவு ரொம்ப  நேரமாச்சு எப்படி தனியாக போகிறாய் . அதனால் காரில் ஏறிக்கொள் போகும் வழியில்  வீட்டில் இறக்கிவிட்டு போகிறேன் என்று சொல்லி இருக்கிறார் .

முதலாளி அப்படி சொன்னதால் மறுக்க முடியாத பெண் காரில் ஏறி இருக்கிறார்.    அந்தப் பெண் காரில் போகும்போது இரட்டை அர்த்தங்களில் பேசிக்கொண்டே வந்திருக்கிறார் முதலாளி.   திடீரென்று அந்த பெண்ணை தொட்டு பாலியல் தீண்டல் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்.   அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்க, மிரட்டி இருக்கிறார்.   இதற்கு மேலும் காரில் இருந்தால் விபரீதமாகி விடும் என்று காரை நிறுத்துங்கள் என்று சொல்லி இருக்கிறார்.   ஆனால் காரை நிறுத்தாமல் தொடர்ந்து பாலியல் சீண்டரில் ஈடுபட்டு இருக்கிறார்.   இதனால் வேறு வழி இன்றி ஓடும் காரில் இருந்து திடீரென்று கதவை திறந்து கொண்டு கீழே குதித்து இருக்கிறார் அந்த இளம் பெண் .

சாலையில் சென்றவர் இதை பார்த்துவிட்டு  காயம் அடைந்து கிடந்த அந்த பெண்ணை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று இளம் பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற்று அந்த ஓட்டல் முதலாளி மீது வழக்கு பதிவு செய்து ஆறு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.  இரண்டு  மணி நேரத்தில் அவரை க கைது செய்து இருக்கிறார்கள்.  அந்த முதலாளி ஓட்டி சென்ற காரையும் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்,