அந்த வீடியோவை காட்டி இளம் பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த முதலாளி

 
வீ

 வேலை தேடிக் கொண்டிருந்த பெண்ணுக்கு தனது துணிக் கடையில் வேலை கொடுத்து திட்டமிட்டபடி அப்பெண்ணை இரவில் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த துணிக்கடை முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்னோவில் சுராஜ் திவாரி என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார்.  23 வயதான இந்த இளைஞருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் சமூக வலைத்தளம் மூலமாக ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.  அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் தனக்கு வேலை தேடிக் கொண்டிருப்பதாக சொல்லி இருக்கிறார். உடனே தனது துணிக்கடையிலேயே வேலை போட்டு தருகிறேன் என்று சொல்லி அழைத்திருக்கிறார். 

க்க்

 அந்த பெண்ணும் சுராஜ் திவாரியின் துணிக்கடையில் சென்று தினமும் வேலை பார்த்து வந்திருக்கிறார்.   கடந்து 2021 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒரு நாள் இரவில் வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த பெண்ணை தனியாக அழைத்து பாலியல் உறவுக்கு அழைத்திருக்கிறார்.  அந்த பெண் மறுக்கவே அப்பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

 அதை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்து வைத்திருந்திருக்கிறார்.   பின்னர் பல சந்தர்ப்பங்களில் இந்த போட்டோவையும் வீடியோவையும் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் வேலையை விட்டு நின்று இருக்கிறார்.

 அப்படியும் அடங்காமல் அந்த பெண்ணின் வீடு தேடி சென்று அந்த வீடியோவை போட்டோவை காட்டி தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.  2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலையை விட்டு நின்ற பிறகும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்திருக்கிறது.

 ஒரு நாள் இந்த பெண் ஆட்டோவில்  சென்று கொண்டிருந்தபோது  ஆட்டோவை வழிமறித்து அந்த வீடியோவையும் போட்டோவையும் காட்டி மிரட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் இதற்கு மேலும் பொறுமையாக இருப்பதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரில் இளைஞர் சுராஜ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.