காதலியை வெட்டி கொன்ற காதலன் உடல் குட்டை சகதிக்குள் இருந்து மீட்பு

 
க்

காதலியை சரமாரியாக வெட்டி கொன்று விட்டு விஷத்தை குடித்து குட்டை தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்ட காதலனின் உடலை  இரண்டு நாட்களுக்கு பின்னர் சகதிக்குள் புதைந்து கிடந்த நிலையில் மீட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டை அடுத்த நங்கலா கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்கிற 24 வயது பெண்ணை அதே கிராமத்தைச் சேர்ந்த தம்மையா என்கிற வாலிபர் சம்பவத்தன்று இரவில் வீட்டிற்குச் சென்று தனது பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார்.  அதன் பின்னர் ஆர்த்தி வீடு திரும்பவில்லை . 

மறுநாள் காலையில் தங்கலா கிராமத்தில் புறநகர் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார் ஆர்த்தி.   அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு விராஜ் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.   போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.  

ப்

 இளம்பெண் ஆர்த்தி வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது.   ஆர்த்தி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் பண்ணை குட்டை அருகே ஒரு ஹெல்மெட், செல்போன், செருப்பு கிடந்திருக்கிறது.  விஷ பாட்டிலும் அங்கே கிடந்திருக்கின்றன.  இவற்றையெல்லாம் கைப்பற்றிய போலீசார் அந்த கிராமத்தைச் சேர்ந்த தம்மையா என்கிற வாலிபரை தேடி வந்தனர்.

 காதல் விவகாரத்தினால் தம்மையா கொலை செய்து இருக்கலாம்.   போலீசில் சிக்காாமல் இருப்பதற்காக விஷத்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர் போலீசார்.   

 பண்ணை குட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.   விஷ பாட்டில் கைப்பற்றப்பட்டதால் விஷத்தை குடித்துவிட்டு பண்ணை குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது.   இதை அடுத்து பண்ணை குட்டையில் தேங்கிய நீரை அகற்றி வந்தனர்.   இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் திம்மையாவின் உடலை பண்ணை குட்டையில் இருந்து மீட்டு உள்ளனர் போலீசார்.

 மூன்று அடிக்கு மேல் சகதி இருந்ததால் திம்மையாவின் உடல் புதைந்திருந்தது.   அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக விராஜ் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.