ஒரே மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய சகோதரிகள் உடல்கள் மீட்பு

 
mu

ஒரே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.   தங்கள் மகள்களை மூன்று இளைஞர்கள் கடத்தி சென்று கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.  பட்டியலின சகோதர சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடூரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பூனம் என்கிற 15 வயது சிறுமியும்,   மனிஷா என்கிற 17 வயது சிறுமியும் ஒரே மரத்தில் தூக்கில்  தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.   இந்த சிறுமிகளின் தாயார் மாயா தேவி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தான் தனது மகள்களை கடத்திச் சென்று அவர்களை கொன்று மரத்தில் தொங்க விட்டுள்ளார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.  

 லக்கிம்பூர் கேரி காவல்துறை அதிகாரிகள் சிறுமிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.   இதற்கிடையில் அச்சிறுமிகளின் உறவினர்கள்,  பொதுமக்கள் என அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

pw சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச மாநில ஏடிஜிபி பிரசாந்த் குமார்,    சம்பவம் குறித்து ஆதாரங்களை சேகரிக்க போலீசார் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறது.     வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மரத்தில் இரண்டு சகோதரிகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டிருக்கின்றன.  பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

 சிறுமிகளில் குடும்பத்தார் அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்.  மேற்கொண்டு சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்தரவு தந்தார் .  

சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் உறவினர்களும் ஊர் மக்களும் திரண்டு வந்து போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.  இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.  

 அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  சமாஜ்வாதியை கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,   உத்தரப்பிரதேச முதல்வரின் உண்மை தற்போது வெளிப்பட்டிருக்கிறது.   யோகி அரசில் குண்டர்கள் தாய்மார்களையும் சகோதரிகளையும் தினமும் துன்புறுத்துகிறார்கள்.  இது மிகவும் வெட்கக்கேடான செயல்.   இந்த விவகாரத்தை அரசு விரைவில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

 திரினாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ள கண்டனத்தில் , இரண்டு சகோதரிகள் மரத்தில்  தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .  உத்தரப்பிரதேச மாநிலம் குற்றங்களின் தலைநகரமாக மாறி வருகிறது.  நிர்வாகம் காவல்துறையின் காது கேளாத மௌனத்தால் மக்கள் சாலையில் வந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.    காங்கிரஸ் நிர்வாகி பிரியங்கா காந்தி,  மாநிலத்தில் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.