அந்த அதிர்ச்சி வீடியோவின் பின்னணி! மகள்களின் காலை பிடித்து சுழற்றி சுழற்றி அடித்த பயங்கரம்!

 
c

 சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக ஒரு அதிர்ச்சி வீடியோ பரவி வந்தது.  அந்த வீடியோவில் ஒரு சிறிய வீட்டிற்குள் லுங்கியுடன் கட்டிலில் ஒரு வாலிபர் அமர்ந்திருக்கிறார்.   கட்டிலுக்கு கீழே பள்ளி சீருடையுடன் இரண்டு சிறுமிகள் நடுநடுங்கியபடியே அச்சத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.   திடீரென்று எழுந்த அந்த வாலிபர் அந்த சிறுமிகளை அடித்து உதைத்து ஒரு காலை பிடித்துக் கொண்டு தலைக்கு மேலே  சுழற்றி சுழற்றி அடிக்கிறார் . அந்த சிறுமிகள் கதறி அழுகிறார்கள். 

இதை பார்த்த பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  அந்த சிறுமிகள் யார்?அந்த கொடூரன் யார்? இதன் உண்மை பின்னணி என்ன? பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகள் மீட்கப்பட வேண்டும் என்று இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வந்தது.   அதே நேரம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.

cc

 இந்த நிலையில்,  இந்த சம்பவம் இந்திராவில் நடந்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.   மனைவியை மிரட்ட வேண்டும் என்பதற்காக பெற்ற தந்தையே தனது மகள்களை இப்படி கொடுமைப்படுத்தி அதை வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்திருக்கிறது.  அந்த இரண்டு சிறுமிகளும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.  அந்த கொடூரன் தலைமறைவாக இருக்கிறான்.

 ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் இருக்கும் வீர பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாவீத்.   இவரது மனைவி நிர்மலா.   இத்தம்பதிக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.   சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடும்பத்திற்கு கொடுக்காமல் மது குடித்து அழித்து வந்திருக்கிறார் தாவித்.  இதனால் தனது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துபாய்க்கு வீட்டு வேலைக்கு சென்று இருக்கிறார் நிர்மலா.  ஏஜென்ட் மூலமாக இந்த வேலைக்கு சென்று இருக்கிறார். அங்கு வேலை செய்து குடும்ப செலவுக்கு பணத்தை அனுப்பி வந்துள்ளார். 

vi

 அந்த பணத்தை வைத்துக் கொண்டு குழந்தைகளை சரிவர கவனிக்காமல் வேலைக்கும் செல்லாமல் மது குடித்து அழித்து வந்திருக்கிறார் தாவித்.  இந்த நிலையில் மனைவியின் நடத்தை மீது திடீரென்று சந்தேகம் வந்திருக்கிறது.  இதனால் துபாயில் நீ சம்பாதித்தது எல்லாம் போதும் . ஊருக்கு திரும்பி வந்துவிடு என்று சொல்லி இருக்கிறார்.   ஆனால் குழந்தைகளின் நலனுக்காக எதிர்காலத்திற்காக நான் இங்கிருந்து சம்பாதித்து தான் ஆக வேண்டும் என்று நிர்மலா சொல்லி இருக்கிறார்.

 இதனால் என்ன  செய்தால் மனைவி ஊர் திரும்பி விடுவாள் என்று தனது குடிகார கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆலோசனை செய்து அதன்படி தனது  குடிகார கூட்டாளியை  செல்போனில் வீடியோ எடுக்க வைத்துவிட்டு,  தனது பெற்ற மகள்களை கொடூரமாக அடித்து காலை பிடித்துக் கொண்டு தலைக்கு மேலே சுழற்றி சுழற்றி அடித்து சித்திரவதை செய்து அவர்கள் கதறுவதை வீடியோவாக எடுத்து அதை மனைவி நிர்மலாவுக்கு அனுப்பி நீ ஊருக்கு திரும்பா விட்டால் உன் மகள்களை இப்படி அடித்து கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

 இந்த வீடியோவை பார்த்து பதறிய நிர்மலா,  உடனே ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு அந்த வீடியோவை அனுப்பி தன் மகள்ளை மீட்குமாறு சொல்லி இருக்கிறார்.  ஊர் பஞ்சாயத்து தலைவர் காவல் நிலையத்தில் சென்று அந்த வீடியோவை ஒப்படைத்து நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார்.   இந்த விவரம் தெரிந்த தாவித் தனது மகள்களை உறவினர் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு தலைமறைவாக இருக்கிறார்.   போலீசார் விசாரண நடத்தி அந்த சிறுமிகளை மீட்டு உள்ளனர்.  அந்த கொடூரனை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.