92வயது மூதாட்டியை புதருக்குள் இழுத்துச்சென்று... வாலிபர் தலைமறைவு

 
h

92 வயது மூதாட்டியை பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று வழியில் பைக்கினை நிறுத்திவிட்டு புதருக்குள்  இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் வாலிபர்.   அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்த அந்த 92 வயது மூதாட்டி மதுவா கிராமத்தில் இருக்கும் உறவினர்களை பார்ப்பதற்காக ரயிலில் சென்று இருக்கிறார்.   நள்ளிரவில் சாடோடு  ரயில் நிலையத்தில் இறங்கி இருக்கிறார்.    அங்கே இருந்து மதுவா  கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார்.  

y

 அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் மூதாட்டி இடம் எங்கே செல்ல வேண்டும் என்று விசாரிக்க , மதுவா கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்ல,  தான் அழைத்துக் கொண்டு விடுவதாக மூதாட்டி இடம் கூறியிருக்கிறார்.  வயதில் முதிர்ந்தவர் என்பதால் தனக்கு உதவி செய்கிறார் அந்த வாலிபர் என்று நினைத்து அந்த அந்த வாலிபரின் பைக்கில் ஏறி இருக்கிறார் மூதாட்டி.

ஊர் எல்லையை தாண்டியதும் வழியில் பைக்கை நிறுத்திவிட்டு அந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக புதருக்குள் இழுத்து சென்றிருக்கிறார்.மூதாட்டி  அச்சம் கொண்டு மறுத்தபோது வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.   பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். 

 அந்த வயதிலும் மெல்ல நடந்து வந்து அந்த வழியாக வந்தவரின் உதவியுடன் மதுவா கிராமத்திற்கு சென்று சேர்ந்து இருக்கிறார்.  உறவினர்களிடம் தனக்கு நடந்த கொடுமையைச் சொல்லி அழுது இருக்கிறார். 

இது குறித்து அவர்கள்  மதுவா காவல் நிலையத்தில் புகார் செய்யவும் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து வாலிபரை பிடிக்க தேடி வருகின்றார்கள்.   சிசிடிவி காட்சிகளை வைத்து வாலிபர் வந்த பைக் எது?  வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.