ஆண் நண்பரின் வெறிச்செயல் - துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸ்களில் அடைக்கப்பட்ட இளம்பெண் உடல்

 
சு

 துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண்ணின் உடல் வெவ்வேறு சூட்கேஸ்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.  அந்த வீட்டில் இளம் பெண்ணுடன் தங்கி இருந்த ஆண் நண்பரை தேடி வருகின்றனர் போலீசார்.  அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிழக்கு நியூயார்க் பகுதியில் இருக்கும் லின்வுட் தெருவில் அமைந்திருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது தளத்தில் இருந்து துர்நாற்றம் வீசி இருக்கிறது. இது குறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 தகவல் அறிந்தது போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் சென்று உள்ளே நுழைந்துள்ளனர்.  அப்போது அந்த வீட்டிற்குள் பல சூட்கேசுகள் இருந்துள்ளன. அந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்த போது ஒரு இளம் பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டி அதில் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்திருக்கிறது. அவற்றை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

யு

 அதன் பின்னர் குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர் போலீசார்.   அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 வயது இளம் பெண் காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.   அப்படியானால் அந்த இளம் பெண் தான் கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதை போலீசார் உணர்ந்து இது குறித்து  வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்த போது, அந்த இளம் பெண்ணுடன் ஆண் நண்பர் ஒருவர் தங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன.

 அந்த ஆண் நண்பருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என்றும் சொல்லி இருக்கிறார்கள்.   இதில் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பெண்ணை கொலை செய்திருக்கலாம்.  பின்னர் உடலை மறைக்கும் நோக்கத்தில் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்திருக்கலாம்.  அதை அப்புறப்படுத்தாமல் வீட்டிலேயே விட்டுவிட்டு துர்நாற்றம் எடுத்து இப்போது போலீசாரின் விசாரணைக்குள் வந்திருக்கிறது. இதை அடுத்து அந்த ஆண் நண்பரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.