அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அடிக்கடி வந்து செல்லும் வாலிபர்கள் - உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி

 
கி

சென்னை அமைந்தகரையில் உள்ள அந்த அடுக்குமாடி  குடியிருப்புக்கு அடிக்கடி வாலிபர்கள் வந்து செல்வதை போலீசர்கள் ரகசியமாக நோட்டமிட்டு வந்தனர். திடீரென்று அதிரடியாக போலீசார் அந்த குடியிருப்புக்குள் உள்ளே நுழைந்த போது அதிர்ச்சி அடைந்தனர்.  அங்கே இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.  பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார் விபச்சார ஏஜென்ட்டை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வ்

சென்னையில் அமைந்தகரையில் அய்யாவு காலனி.  இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு வாலிபர்கள் அடிக்கடி வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.  இதை அடுத்து போலீசார் அந்த குடியிருப்பின் மீது சந்தேகம் கொண்டு ரகசியமாக நோட்டமிட்டு வந்துள்ளனர்.   அப்போது அடுக்கு மாடி குடியிருப்புக்குள் வாலிபர்கள் அடிக்கடி வந்து செல்வது தெரிய வந்திருக்கிறது.  

 உடனே போலீசார் அதிரடியாக அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்குள் நுழைத்து சோதனையில் ஈடுபட்ட போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   அந்த வீட்டில் இரண்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.

 திருவேற்காடு கனகதுர்கா நகரை சேர்ந்த பாலியல் புரோக்கர் சங்கீதா இரண்டு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்திருக்கிறார்.  இந்த இரண்டு இளம்பெண்களையும் மீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.   பாலியல் புரோக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.