மனநலம் குன்றிய சிறுமி- பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் தற்கொலை

 
b

மனநலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த பள்ளி ஆசிரியரை கைது செய்ய தேடிய போது அந்த ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்திருக்கிறது .

குஜராத் மாநிலத்தில் வதோதரா.   இப்பகுதியில் உள்ள வச்சில்பிட் கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்த பாபுபாய் ராத்வா அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.   அப்பகுதியில் உள்ள மனநலம் குன்றிய சிறுமி ஒருவரின் வீட்டின் அருகே வசித்து வந்துள்ளார். 

bb

 மன நலம் குன்றிய அந்த சிறுமியை வீட்டில்  தனியாக விட்டு விட்டு அடிக்கடி வெளியே சென்று விடுவது உண்டு.  அந்த சமயங்களில் பாபுபாய் ராத்துவா அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.   மெல்ல மெல்ல இந்த விவரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளார்கள்.  

 பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.   ஆசிரியர் பாபுபாய் ராத்மாவை கைது செய்ய தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு ஆண் தற்கொலை செய்து கொண்டிருப்பது குறித்த தகவல் வரவும்,  போலீசார் அங்கு சென்று பார்த்த போது தான் அது தேடப்பட்டு வந்த ஆசிரியர் பாபுபாய் ராத்வா என்பது தெரியவந்துள்ளது.  இதை அடுத்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.