3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

 
c

மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.  

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் படப்பை டேவிட் நகர்.  இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மஞ்சுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தமிழரசு என்கிற 28 வயது வாலிபர் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.   தமிழரசு அந்தப் பள்ளியில் படித்து வரும் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார் .

j

இதை அந்த குழந்தை பெற்றோரிடம் சொல்லி அழுது இருக்கிறது.  அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று உடற்கல்வி ஆசிரியர் தமிழரசு மீது புகார் அளித்துள்ளனர்.   பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் தமிழரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்  போலீசார்.

மூன்றரை வயது குழந்தைக்கு  ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி பரவி படப்பை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.