3 பேருக்கும் டாட்டா - 4வது திருமணத்தில் சிக்கிய கல்யாண ராணி

 
sஒ

மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களுக்கு டாட்டா காட்டி விட்டு நான்காவது திருமணத்தின் போது பிடிபட்டுள்ளார் கல்யாண ராணி சௌமியா.

கரூரில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சௌமியா.   பிகாம் பட்டதாரியான இவர் கரூரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி நடத்தி வந்திருக்கின்றார். சகோதரி திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.   

க்ல்

 சௌமியா சிறுவயது முதலே ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடுத்தவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.  இவரின் நடவடிக்கை பிடிக்காத பெற்றோர்கள் மகளை கண்டித்து வந்திருக்கிறார்கள்.   இவன் காரணமாகவே  பெற்றோர்களை விட்டு பிரிந்த சௌமியா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்திருக்கிறார். 

 அப்போது ராஜேஷ் என்கிற போலீசார் உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.   அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.   கணவர் தனது உறவினர்களிடம் தனக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுத் துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் நல்ல பழக்கம் இருக்கிறது.  அதனால் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி பலரிடம் பணம் பெற்று இருக்கிறார் .  அதன் பின்னர் கணவரிடம் அந்த பணத்தைப் பறித்துக் கொண்டு அவரை ஏமாற்றி இருக்கிறார் .   

கரூரில் உள்ள மணவாடி பகுதிக்கு சென்று ஏழு லட்சத்திற்கு ஒரு இடத்தை சொந்தமாக வாங்கியிருக்கிறார்.   இதற்கிடையில் மோசடி புகாரில் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் சௌமியாவை கைது செய்துள்ளனர்.   இதன் பின்னர் ஜாமினில் வெளியே வந்த சௌமியா முதல் கணவர் போலீஸ்காரரை உதறிவிட்டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்கிற வாலிபரை இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.   அவருடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தியவர் அவரையும் கழட்டி விட்டு இருக்கிறார்.

அய்

 ராமநாதபுரத்தில் இருந்து கரூருக்கு சென்ற சௌமியா காந்திகிராமத்தில் குடியேறி இருக்கிறார்.  அங்கேயும் வங்கியில் உதவி மேலாளராக இருக்கிறேன்,  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லி அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் சொல்லி 50 லட்சம் வரைக்கும் வாங்கிக் கொண்டு எந்த வேலையும் வாங்கித் தராமல் இருந்திருக்கிறார் .

இந்த நிலையில் மூன்றாவதாக மேலும் ஒருவரை சௌமியா திருமணம் செய்துள்ளார்.  இதை அடுத்து நான்காவதாக கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரை திருமணம் செய்வதற்காக சௌமியா தயாராகி வந்திருக்கிறார்.   இதற்கிடையில் அடிக்கடி சவுமியா  வீட்டை விட்டு மாயமாகி  இருக்கிறார்.

மி

 இந்த நிலையில் காந்திகிராமத்தில் உள்ள  வீட்டில் இருப்பதாக பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு தகவல் வந்திருக்கின்றது.   சௌமியாவை கையும் களவுமாக பிடித்து கரூர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்டவர்கள்.   சௌமியாவிடம் கரூர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சௌமியா மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தாலும்,  அவர்  எந்த வங்கியிலும் உதவி மேலாளராக பணிபுரியவில்லை என்பதும்,  அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் இல்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.  போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் .

சௌமியா மேலும் எத்தனை திருமணங்கள் செய்திருக்கிறார் எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் சௌமியாவை ஆஜர்படுத்தி விசாரணை நடத்தினால்தான் முழு விவரம் தெரிய வரும் என்கிறார்கள் கரூர் குற்றப்பிரிவு போலீசார்.