விதவைப் பெண்களை குறி வைத்து நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பல் டாக்டர்

 
ga

விதவைப் பெண்களை குறி வைத்து மடக்கி அவர்களை தன் ஆசை வலையில் விழ வைத்து அதன் பின்னர் அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து, பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார் பல் மருத்துவர் நிஷாந்த் ரவிச்சந்திரன்.   போதை பழக்கத்திற்கும் இவர் அடிமையானவர் என்பது தெரிய வந்திருக்கிறது.   இவர் மீது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் துணிந்து போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

 சென்னை பள்ளிக்கரணையில் காமாட்சி மருத்துவமனைக்கு அருகே  இயங்கி வரும் பல் மருத்துவமனையின் டாக்டர் நிஷாந்த் ரவிச்சந்திரன்.  அவர்தான் அந்த பல் மருத்துவமனையை இயக்கி வருகிறார்.   இந்த பல் டாக்டர் மீது  கணவனை இழந்த இளம் பெண் ஒருவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

ni

 கணவனை இழந்த விதவையான தான் மருத்துவமனைக்குச் சென்ற போது நிஷாந்த் ரவிச்சந்திரன் அறிமுகம்.   அதன் பின்னர் என்னை அடிக்கடி அவர் தொடர்பு கொண்டு பேசினார்.  விதவை என்று தெரிந்ததால் என் மீது ஆசை வார்த்தை சொல்லி காதல் வார்த்தைகளை வீசினார்.  திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னார்.  இதை நம்பி நான் அவரை விரித்த வலையில் விழுந்து விட்டேன்.  

அவர் தனிமையிலும் என்னுடன்  உல்லாசம் அனுபவித்தார்.   அதன் பின்னர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்தார்.  போதைக்கு அடிமையானவர் என்பது அப்போதுதான் தெரிந்தது.  அவரின் கொடுமை  தாங்க முடியவில்லை அதனால் .  இப்படிப்பட்டவரை திருமணம் செய்து கொண்டு வாழ எனக்கு விருப்பமில்லை.   அவர் மேலும் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிகிறது. அவரை விசாரணை நடத்தி கைது செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

 போலீசாரும் பல் மருத்துவர் நிஷாந்த் ரவிச்சந்திரனை அழைத்து  நடத்திய விசாரணையில் அவர் விரித்த வலையில் நான்கிற்கும் மேற்பட்ட விதவை பெண்கள் சிக்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.   அந்தப் பெண்களும் நிஷாந்த் மீது புகார் கொடுக்க இருந்திருக்கிறார்கள்.   ஆனால் புகார் கொடுத்தால்  உங்களுடன் தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி வந்திருக்கிறார்.  இதை அடுத்து போலீசார் பல் மருத்துவர் நிஷாந்த் அவரது தோழி ஷெரீன், கூட்டாளி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.  இந்த விவகாரத்தில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது  என்பது குறித்தும் தொடர்ந்து இடம் விசாரணை நடத்தி வருகின்றனர் பள்ளிக்கரணை போலீசார்.