தனியார் கல்லூரியில் புகுந்து மாணவி சரமாரி குத்திக் கொலை

 
el

 தனியார் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு இன்ஜினியரிங் மாணவரும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.  பெங்களூருவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் எலகங்கா அடுத்த ராஜனகுண்டே பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.  இக்கல்லூரியில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்  லயசீதா என்கிற 19 வயது மாணவி. 

 கோலார் மாவட்டத்தில் முலபாகல் அருகே காஜிபுரா கிராமத்தைச் சேர்ந்த லயசிதா தந்தை இல்லாததால் தாய், இரண்டு சகோதரிகளுடன் எலகங்கா அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்திருக்கிறார்.

bh

 எலகங்காவிலிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வர முடியாது என்பதால் கல்லூரி விடுதியிலேயே லயசிதா தங்கி படித்து வந்திருக்கிறார்.  வழக்கம் போல் நேற்று காலையில் கல்லூரிக்கு சென்று இருக்கிறார்.  அதன் பின்னர் வகுப்பறையில் மாணவிகளுடன் அமர்ந்திருக்கிறார்.

 அப்போது பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு என்ஜினியரிங் படித்து வரும் பவன் கல்யாண் லயசிதாவை பார்க்க கல்லூரிக்கு வந்திருக்கிறார்.  வகுப்பறையில் இருந்த லயசிதாவிடம் பேச வேண்டும் என்று அழைத்திருக்கிறார். வெளியே வந்து கல்லூரி வளாகத்தில் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 அப்போது பவன் கல்யாண் லயசிதாயிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிற. து இதில் ஆத்திரம் அடைந்த பவன் கல்யாண் திட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லயசிதாவை சரமாரியாக குத்தி இருக்கிறார்.  வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த கத்தி குத்தி காயமடைந்து அலறிக்கொண்டு ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். உடனே பவன் கல்யாண் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

 இதை பார்த்து அதிர்ந்து போன மாணவர்களும் கல்லூரி ஊழியர்களும் இரண்டு பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  அங்கு மாணவி லயசிதாவை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 பவன் கல்யாணை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு பவுரின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு அவருக்கு சீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 சம்பவம் குறித்து அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.  காதல் விவகாரத்தில் இந்த கொலை மற்றும் தற்கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.  பவன் கல்யாண் -லயசிதா இருவரும் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர் .

லயசிதா கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது.  அப்படி இருக்கும் போது நடந்த இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.