மாணவியை 18 மணி நேரம் அறையில் பூட்டி வைத்து பாலியல் சித்திரவதை - இரண்டு தனிப்படைகள் அமைப்பு

 
r

ஆட்டோவுக்காக காத்திருந்த கல்லூரி மாணவியை பைக்கில்  அழைத்துச் சென்று விடுவதாக சொல்லி ஓட்டலுக்குள் அழைத்துச் சென்று 18 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள வாலிபரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் தலைநகர் லக்னோவில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்திருக்கிறார் அந்த மாணவி.   கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று கல்லூரி செல்வதற்காக சார்பாக் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோவுக்காக காத்திருந்திருக்கிறார்.  அப்போது தூரத்து உறவினர் ஒருவர் அங்கு பைக்கில் வந்திருக்கிறார்.  தான் கல்லூரியில் சென்று விடுவதாக சொல்லி அழைத்திருக்கிறார்.  தெரிந்த நபர் தானே என்று நம்பி அந்த மாணவி அவருடன் பைக்கில் சென்று இருக்கிறார் .

h

சிறிது தூரம் சென்றதும் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் தனது பொருட்கள் இருக்கிறது.  அதை எடுத்து வந்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.  அதை நம்பி அந்த மாணவியும் அவரின் பின்னால் ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார் . அங்கே ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதும் அந்த மாணவியை அறைக்குள் தள்ளி கதவைப் சாத்திக் கொண்டிருக்கிறார். 

 அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.  18 மணி நேரம் அந்த மாணவியை வெளியே விடாமல் பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர் , மறுநாள் ஏழாம் தேதி மதியம் 1:30 மணியளவில் நர்சிங் கல்லூரி அருகே மாணவியை இறக்கிவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்.   இதன் பின்னர் கல்லூரிக்கு சென்ற மகள் வீடு விரும்பாததால் பாதற்றமடைந்திருந்த  பெற்றோரிடம் விபரத்தைச் சொல்ல,  அவர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

 நாகா  காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவிக்குமருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மாஜிஸ்திரிடம் வாக்குமூலமும் பெறப்பட்டிருக்கிறது. தலைமறைவாகிவிட்ட குற்றவாளியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.