சிறுமிக்கு சிறப்பு பூஜை: சாமியாருக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது

 
si

 சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே இருக்கும்  வேட்டங்குடி பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(50).  இவர் மானகிரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்து குறி சொல்லும் தொழில் செய்து வந்திருக்கிறார் . 

ராமகிருஷ்ணனிடம் குடும்ப பிரச்சினைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது பெண் குறி கேட்க வந்திருக்கிறார்.   இது தொடர்பாக அடிக்கடி வந்து சென்றபோது அந்த பெண்ணுக்கும் சாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.   கணவருக்கு சரியான வேலை அமையவில்லை என்று சொல்லி குறி பார்த்து வந்திருக்கிறார் அந்தப்பெண் . 

ra

 இது தொடர்பாக சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று சாமியார் சொன்னதை அடுத்து தனது எட்டு வயது மகளுக்கு அமாவாசை இரவு சிறப்பு பூஜை செய்தால் செல்வம் பெருகும் என்று சாமியார் சொன்னதை நம்பி இருக்கிறார்.

 சம்பவத்தன்று தனது பத்து வயது மகனையும் 8 வயது மகளையும் சாமியாரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார் அங்கே சென்றதும் அந்த எட்டு வயது சிறுமிக்கு சாமியார் ராமகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.   இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செந்தில்குமாரிடம் புகார் அளித்திருக்கிறார்.  அவரது உத்தரவின் பேரில் நாச்சியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்கு பதிவு செய்து  சாமியார் ராமகிருஷ்ணனையும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாரையும் கைது செய்துள்ளனர்.  இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.