அந்தரங்க புகைப்படங்களை காட்டி பெண்ணை மிரட்டிய சிறப்பு எஸ்.ஐ.

 
v

நடுத்தர வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் எனச் சொல்லி பாலியல் தொல்லை கொடுத்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

 சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த 37 வயதான அந்த நடுத்தர வயது பெண் கடந்த ஆண்டும் ஜனவரி மாதம் நாலாம் தேதி அன்று பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்று இருக்கிறார்.   அந்த விழாவிற்கு புனித தோமையார் மலை ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கார்டுவெல் பங்கேற்றிருக்கிறார்.

 54 வயதான ஆண்ட்ரூஸ் அந்த பெண்ணுடன் அப்போது யதார்த்தமாக பேசி இருக்கிறார்.  அப்பெண் தாயார்  இறந்ததால் மன அழுத்தத்தில் இருப்பதை தெரிந்துகொண்டு ஆறுதலாக பேசியிருக்கிறார்.   அதை அடுத்து ஆண்ட்ரூஸ் அப்பெண்ணிடம் தொடர்ந்து ஆறுதலாக பேசியிருக்கிறார்.

si

 அந்த பெண் தனக்கு திருமணமாகவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.   இதனால் அவருடன் தொடர்ந்து ஆறுதலாக பேசி வந்த ஆண்ட்ரூஸ்,  இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறி இருக்கிறார்.   அதன் பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை அடுத்து ஆண்ட்ரூஸ் உடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

 ஒரு கட்டத்தில் ஆண்ட்ரூஸ் ஆண்ட்ரூஸ்க்கு  வயது அதிகம் என்பதும்,  தன்னை ஏமாற்றி தன்னுடன் பழகி வருவதும் தெரிய வந்திருக்கிறது . இதனால் அவரை விட்டு பெண் விலகி இருக்கிறார்.   உடனே அப்பெண்ணுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டி இருக்கிறார். இதைக்கண்டு அதிர்ந்து போன அந்த பெண்,  சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  

 இந்த புகாரின் பேரில் ஆண்ட்ரூஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய நினைத்தனர் போலீசார்.   ஆனால் அது தெரிந்ததும் ஆண்ட்ரூஸ் கொல்கத்தாவிற்கு தப்பி சென்று இருக்கிறார்.    நான்கு மாதங்களுக்கு பிறகு அவரை கொல்கத்தாவில் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர் சேலையூர் அனைத்து மகளிர் போலீசார்.   பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.