மாமியாருடன் மருமகன் எஸ்கேப்! மாமனார் போலீசில் கதறல்

 
க்ஷ்


மாமியாருடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் மருமகன்.   மாமனார் போலீசில் கண்ணீருடன் புகார் அளித்திருக்கிறார்.  ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

 ராஜஸ்தான் மாநிலத்தில் சிரோகி மாவட்டத்தில் அனாதரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சியாகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் . இவருக்கு மூன்று மகள்கள் . ரமேஷ் தனது மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். 

ஒ

 நாராயணன் ஜோகி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது மாமியாருக்கும் மருமகனுக்கு இடையே கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.   இந்த நிலையில் இருவரும் கடந்த 1ம் தேதி அன்று வீட்டை விட்டு சென்று குடித்தனம் நடத்த முடிவு செய்து விட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள்.

 இதனால்  நாராயணன் ஜோகியின் மாமனார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.  திருமணத்திற்கு பிறகு மகளும் மருமகனும் எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார்கள்.  எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.   நாராயணன் ஜோகி டிசம்பர் 30ஆம் தேதி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.  அப்போது நானும் மருமகனும் கூடுதலாக மதுபானம் சாப்பிட்டோம் .  

பின்னர் அடுத்த நாள் எழுந்தபோது,  என் மனைவியையும் மருமகனையும் காணவில்லை.   எங்கு தேடியும் கிடைக்கவில்லை .  பின்னர் தான் இருவரும் ஓடி விட்டார்கள் என்பது தெரிய வந்தது.   மருமகன் என் மனைவியை மயக்கி அழைத்துச் சென்று விட்டார் என்று ரமேஷ் அந்த குற்றச்சாட்டில் கூறியிருக்கிறார்.

 ரமேஷ் புகாரியில் வழக்கு பதிவு செய்த அனந்தரை  போலீசார், மாமியார் மருமகன் இருவரையும் தேடி வருகின்றனர்.