சிறுமி மரணத்திற்கு பின் வெளிவந்த அதிர்ச்சி வீடியோ - 6 பேரும் சிறையிலடைப்பு

 
v

 சிறுமியின் மரணத்திற்கு பின்னர் வெளிவந்த அந்த வீடியோவை பார்த்து  உறவினர்கள் மட்டுமல்லாது கிராம மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அடைந்தனர் . இதன் பின்னர் சம்பந்தப்பட்ட 75 வயது முதியவர் உள்பட ஆறு பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 சென்னையில் அம்பத்தூர் அடுத்த சோழவரம்.  இப்பகுதியில் உள்ள எருமை வெட்டி பாளையம்  கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது.   இந்த செங்கல் சூளையில் பெற்றோரை இழந்த 9 வயது சிறுமி தனது உறவினருடன் தங்கி இருந்து வந்துள்ளார்.  அவர் அருகில் உள்ள பள்ளியில் நாலாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் .

அந்த சிறுமி கடந்த ஜூலை  24ஆம் தேதி அன்று செங்கல் சூலையின் பின்புறத்தில் உள்ள திறந்த வெளியில் நின்றபோது,  அந்த சிறுமியை பாம்பு கடித்து இருக்கிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சிறுமிக்கு பாம்பு கடித்திருந்தது தெரிந்ததும் உடனே சிறுமியை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.  அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்.

o

 இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள்.  இந்த நிலையில் அந்த சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்திருக்கிறது.   இதை அறிந்த அச்சிறுமியின் உறவினர்கள் ,கிராமத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் . இது குறித்து சோழவரம் போலீசாருக்கு  அவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

சோழவரம் காவல் நிலையத்திற்கு இந்த புகார் வந்ததும்,  இந்த புகார் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.   மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் எருமை வெட்டி பாளையத்தைச் சேர்ந்த கண்ணன், பாஸ்கர் ,சதீஷ் ,ரமேஷ் ,விஜயகுமார் ஆகிய ஐந்து பேரும் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.  

அந்த ஐந்து பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த பாலு என்கிற 75 வயது முதியவர் தான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் அதை இந்த ஐந்து இளைஞர்களும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள்.   இதன் பின்னர் அந்த முதியவர் உட்பட ஆறு பேரையும் கைது செய்து போக்டோ சட்டத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.