இலவச சவாரிக்கு ஆசைப்பட்டு ஆட்டோவில் ஏறிய சிறுவனுக்கு அதிர்ச்சி

 
au

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு தூக்கி சென்ற ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 புதுச்சேரி மாநிலத்தில் கோவிந்த சாலை பகுதி.   இப்பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன்  என்ற 28 வயது வாலிபர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.   கடந்த 30ஆம் தேதியன்று இரவு காமராஜர் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.   அப்போது அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த 12 வயது சிறுவனிடம் நைசாக பேசி இருக்கிறார்.

xz

 ஆட்டோவில் இலவசமாக சவாரி செய்யலாமா என்று சிறுவனை அழைத்திருக்கிறார்.  இலவச சவாரிக்கு ஆசைப்பட்டு ஆட்டோவில் ஏறிக்கொள்ள ஒரு மறைவான இடத்திற்கு சென்றதும் ஆட்டோவை நிறுத்தி விட்டு சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார் ஆட்டோ டிரைவர் .  இதில் அதிர்ச்சி அடைந்த சிறுவன் ஸ்டீபன்.   

ஸ்டீபனிடமிருந்து தப்பி சென்று பெற்றோரிடம் நடந்ததை சொல்லியிருக்கிறான்.   இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.   அக்குழுவினரின் விசாரணைக்குப் பின்னர் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.