சத்தம் போட்டதால் கல்லால் தலையில் அடித்தேன்.. மயங்கியதும்.. பலாத்காரம் செய்தபோதே உயிரிழந்துவிட்டார்..

 
ra

காலையில் வேலைக்குச் சென்று பெண் சடலமாக முட் புதருக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.   வட மாநில இளைஞர் அந்தப் பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த போது சத்தம் போட்டதால் தலையில் கல்லால் அடித்து மயக்கம் வரவைத்து பலாத்காரம் செய்த போது அப்பெண் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.   போலீசார் அந்த வட மாநில இளைஞரை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

 திருப்பூர் மாவட்டத்தில் கரியாக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி.   இவரது மனைவி ரேவதி(35).    கணவர் ,மகனுடன் வசித்து வந்துள்ளார் ரேவதி. கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை .  இதனால் குடும்பச் சூழல் காரணமாக தனியார் பனியன் நிறுவனத்தில்  கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.

எ

 ரேவதி வேலை முடிந்து காட்டுப் பாதை வழியாக  தனது வீட்டிற்கு செல்வது வழக்கம்.   அப்படித்தான் கடந்த பத்தாம் தேதியும் வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்கு காட்டுப்பாதை வழியாக வந்து சென்றிருக்கிறார் ரேவதி.   ஆனால் வீட்டிற்கு அவர் செல்லவில்லை.   இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்திருக்கிறார்கள்.   எங்கேயும்  இல்லாததால் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

 போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில் முட்புதர் அருகே கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ரேவதி.   இதை அடுத்து காணவில்லை என்கிற வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர்.   அப்போது ரேவதி வேலை பார்த்து வந்த பனியன் மில் அருகே வசித்து வந்த வடமாநில வாலிபர் உமேஷ்  ரிஷிதேவ்(41) என்பவர் மீது சந்தேகம் வந்திருக்கிறது.

க்

 இதை அடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது ரேவதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.  ரேவதி வேலை முடிந்த தினமும் வீட்டிற்கு தனியாக் அசெல்வார்.  அவர் செல்லும் பகுதி காட்டுப் பகுதி.  ஆள் நடமாட்டம் இருக்காது.  அப்படித்தான் சம்பவத்தன்று ரேவதி தனியாக செல்வதை அறிந்து பின்தொடர்ந்து சென்றேன். 

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென்று ரேவதியை பிடித்து காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்றேன்.  அவர் தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார்.  இதனால் அங்கிருந்த கல்லால் தலையில் ஓங்கி அடித்தேன்.  இதில் ரேவதி மயங்கி விட்டார்.  அப்போது அவரை பலாத்காரம் செய்தேன்.  பலாத்காரம்  செய்த போது அவர் உயிரிழந்து விட்டார்.   இதனால் அங்கிருந்து நான் தப்பித்து வந்து விட்டேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

 இதன் பின்னர் உமேஷ் ரிஷிதேவை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.