சிறுமிக்கு பாலியல் தொல்லை! ஆயுர்வேத மருத்துவருக்கு ஆயுள்

 
ra

ஐந்து ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆயுர்வேத மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 

 ராஜஸ்தான் மாநிலத்தில் பண்டி மாவட்டம்.  அம்மாவட்டத்தில் உள்ள டொல்டா கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவமனை இயங்கி வருகிறது .  கடந்த 2013ஆம் ஆண்டு அந்த மருத்துவமனையில் வெனிராம் மீனா என்கிற முப்பது வயது வாலிபர் மருத்துவர் பணியில் சேர்ந்துள்ளார்.   அப்போது அந்த மருத்துவமனையில் 13 வயது சிறுமி சிகிச்சைக்காக சென்றிருக்கிறார்.   அந்த சிறுமிக்கு டாக்டர் வெனிராம் பாலியல்  தொல்லை கொடுத்திருக்கிறார். 

rr

 அன்று முதல் அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக இப்படி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். 

 டாக்டர் வெனிராம் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததும்,  சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்,  டாக்டர் வெனிராமை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 

 இது குறித்த வழக்கு பண்டி மாவட்டத்தில் உள்ளது போக்சோ  சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்திருக்கிறது .  இந்த நிலையில் வழக்கில் விசாரணைகள் முழுவதும் முடிந்து நேற்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.   டாக்டர் வெனிராம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் குற்றவாளியான டாக்டருக்கு வெனிராமுக்கு ஆயில் தண்டனை 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.   உத்தரவினை அடுத்து டாக்டர் வெளி ராம் ஸ்டைல் அடைக்கப்பட்டுள்ளார்