ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமை ஆசிரியர் சிறையிலடைப்பு

 
க்ஷ்

ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். 

 வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட்டு தாலுகாவில் மாச்சம்பட்டு ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி அரசு துவக்கப் பள்ளியில் 11 வயது சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.   இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் பால்வண்ணன்.  இவர் பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் .

ப்

நேற்று முன்தினம் ஜூலை 21ஆம் தேதி அன்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான 56 வயது பால்வண்ணன் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.   இதை அடுத்து சிறுமியின் தந்தை உமராபாத் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.   புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பால்வண்ணனின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர்.   இதை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தலைமை ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேர்ணாம்பட்டு பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.