6 மாதங்களில் 2200 சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள்

 
si

 கடந்த 6 மாதங்களில் 2200க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.  பாகிஸ்தான் நாட்டில்தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

சர்வதேச மகளிர் அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டு தரவரிசையில் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர உலக அறிக்கையில்,   மொத்தம் இருக்கும் 170 நாடுகளில் பாகிஸ்தான் 167வது இடம் வகிக்கின்றது என்று மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் தெரிவித்து இருக்கிறது.

 அரசு சாரா அமைப்பு அறிக்கை ஒன்றின் படி,   கடந்த ஆறு மாத காலங்களில் பாகிஸ்தான் நாட்டில் 2200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.   

ff

பாகிஸ்தான் நாட்டிலிருந்து வெளிவரும் தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியில்,  சிறுவர் சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 2211 ஆக இருக்கிறது.   இது அந்நாட்டில் மனித உரிமைகளின் இருண்ட சூழ்நிலையை எடுத்துக்காட்டி இருக்கிறது.  

79 செய்தி நிறுவனங்களிலிருந்து இதற்காக தரவுகள் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன.   இதில் பல வழக்குகள் பாலியல் பலாத்காரம்,  பாலியல் துன்புறுத்தலுக்கு கடத்தப்படுவது நடக்கின்றன என்று அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.   சிறுவர்கள் 1,004 எண்ணிக்கையிலும் சிறுமிகள் 1207 எண்ணிக்கையிலும் உள்ளனர்.    803 சிறுவர் சிறுமிகள் கடத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.    அவர்களில் 298 பேர் சிறுவர்கள் என்று 24 பேர் சிறுமிகள் கடத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்று தெரிந்து வைக்கப்பட்டுள்ளது . 

சிறுவர், சிறுமிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக நகரப் பகுதிகளில் 52% வழக்குகளும் கிராமப்புற  பகுதிகளில் 48% வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன.