அடிக்கடி நண்பனை வீட்டுக்கு கூட்டி சென்றதால் கைக்குழந்தையுடன் பறிதவிப்பு! கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

 
gg

அடிக்கடி நண்பனை வீட்டிற்கு அழைத்துச் சென்றதால் நண்பனின் மனைவியுடன் அவருக்கு கள்ள உறவு ஏற்பட்டு இருக்கிறது.   கடைசியில் கணவனும்  கணவனும் கைக்குழந்தையும் வேண்டாம் என்று  கள்ளக்காதலுடன் ஓடிப்போன பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  கள்ளக்காதலனும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தர்மபுரியில்  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 தர்மபுரி மாவட்டத்தில் திட்டம் பட்டியில் வசித்து வந்தவர் சதீஷ்.   அதே பகுதியை சேர்ந்த சங்கீதா(19) என்பவரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்திருக்கிறார்.  இவருக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது.   சதீஷ் அவரது மனைவி சங்கீதா இருவரும் திருப்பூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர். பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சின்னப்பையன்(20) என்பவரும் திருப்பூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.

sa

 அப்போது சின்ன பையனுக்கும் சதீஷ்க்கும்  பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது .  இதனால் சின்னப் பையனை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் சதீஷ் .   அப்போது சதீஸ் மனைவி சங்கீதாவுடன் சின்ன பையனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இது கள்ள உறவாக மாறியிருக்கிறது .   இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.  

 இது சதீஷ்க்கு தெரியவந்ததும் இந்த உறவை கைவிடுமாறு எச்சரித்திருக்கிறார்.   ஆனாலும்  சங்கீதா அதை பொருட்படுத்தவில்லை.  தொடர்ந்து சதீஷ் எதிர்ப்பு தெரிவித்ததால்  சொந்த ஊருக்குச் சென்று தனது கைக்குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு,  கடந்த மே 3-ம் தேதி என்று சின்ன பையன் உடன் தலைமறைவாகி இருக்கிறார்.

bb

 நண்பருடன் மனைவி மாயமாகி விட்டதை அடுத்து பெண்ணாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருக்கிறார் சதீஷ்.  சின்னப்பையன்-  சங்கீதா இருவரிடமும் செல்போனில் பேசிய போலீசார்,  காவல் நிலையத்திற்கு வாருங்கள்.   நேரில் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம் என்று அழைத்து இருக்கிறார்கள். அதன்படியே இருவரும் காவல் நிலையம் வந்து இருக்கிறார்கள் .  ஆனால் காவல் நிலையத்தில் வாசலிலேயே இருவரும் மயங்கி விழுந்திருக்கிறார்கள்.

 அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதுதான் அவர்கள் இருவரும் விஷம் குடித்துள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது.   மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும்  சிகிச்சை பலனின்றி இருவருமே இறந்து விட்டனர்.   கை குழந்தையுடன் தவித்து நிற்கிறார் சதீஷ்.