ஸ்கேன் சென்டரில் ரகசிய கேமரா -உடைமாற்றிய பெண் அதிர்ச்சி

 
c

 ஸ்கேன் சென்டரில் ரகசியமாக செல்போனை வைத்து உடைமாற்றும்  பெண்களை வீடியோ எடுத்து ரசித்து வந்திருக்கிறார் அந்த ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வந்த அன்ஜித் என்கிற இளைஞர்.  ஒரு பெண் அளித்த புகாரில்  அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

b

 கேரள மாநிலத்தில் பத்தனம் திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்,  தன் காலில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்திருக்கிறார் . மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்கச் சொன்னதால்,  ஸ்கேன் செண்டருக்கு சென்றிருக்கிறார்.  அங்கே ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக உடையை மாற்றும்படி கூறியிருக்கிறார்கள்.

 இதனால் ஸ்கேன் சென்டரில் இருந்த உடை மாற்றும் அறைக்கு சென்று அந்த பெண் தன் உடையை மாற்றி இருக்கிறார். அப்போது அந்த பெண் அந்த அறையில் ரகசியமாக செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்து போய் இருக்கிறார்.  உடனே அந்த செல்போனை எடுத்து பார்த்திருக்கிறார்.  அதில் தான் உடைமாற்றும் வீடியோ இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே அந்த வீடியோவை  செல்போனில் இருந்து நீக்கி இருக்கிறார்.

 அதன் பின்னர் அந்த செல்போனை எடுத்துச் சென்று போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி அந்த ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வந்த அன்ஜித் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட அந்த இளைஞரிடம் அந்த செல்போனை வைத்து காட்டி மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.