பள்ளி மாணவியின்அலறல்! வட மாநில தொழிலாளிக்கு 45 ஆண்டு சிறை

 
o

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில தொழிலாளிக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது ஊட்டி நீதிமன்றம்.
போக்சோ வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

 நீலகிரி மாவட்டத்தில் அதிகரபட்டி பேரூராட்சி.   இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி கிளிஞ்சாடா.  இப்பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டில் வட மாநில தொழிலாளி விஜய் ஓரன் என்கிற 30 வயது வாலிபர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார்.   அப்போது அதே பகுதியில் உள்ள 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார் .

or

2017 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி அன்று அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க,  மாணவி போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விஜய் ஓரனை பிடித்து போலீசில் ஒப்படைக்க,  குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் விஜய் ஓரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இது தொடர்பான வழக்கு ஊட்டி மகிளா மன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சஞ்சய் பாபா,  குற்றவாளியான வடமாநில தொழிலாளி  விஜய் ஓரனுக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.   மேலும் எட்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார்.