வீடியோ காலில் மாணவியை ஆடைகளை கழற்றச்சொல்லி..கழிவறையில் துன்புறுத்தி.. பள்ளி பியூன் சிறையிலடைப்பு

 
v

 பள்ளி மாணவிக்கு இரண்டு மாதங்கள் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த பள்ளி பியூன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த பள்ளி மாணவிக்கு இரண்டு மாதங்களாக அதை பள்ளியின் பியூன் தொடர்பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   வீடியோ ஹாலில்  ஆடைகளை அவிழ்த்து போட்டு நிற்கச்சொல்லி இருக்கிறார்.   

மும்பையில் கிராண்ட் சாலையில் அமைந்திருக்கிறது அந்த புகழ் பெற்ற தனியார் பள்ளி.   இந்த பள்ளியில் 35 வயது வாலிபர் ஒருவர் பியூன் வேலை செய்து வந்திருக்கிறார்.    அப்பள்ளியில்  பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியிடம் நட்பாக பழகி வந்திருக்கிறார்.   பள்ளியின் பியூன் என்ற ரீதியில் அந்த மாணவியும் அவருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார்.

fd

 கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அந்த மாணவியை பலமுறை கழிவறையில் வைத்து பாலியல் துன்பங்களை செய்து கொடுத்து இருக்கிறார்.  வெளியே சொல்ல கூடாது என்று மிரட்டி இருக்கிறார்.   அந்த மாணவியும் திடீரென்று பியூன் இப்படி நடந்து கொள்வார் என்பது தெரியாமல் தவித்து வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்திருக்கிறார்.

 கடந்த இரண்டு மாதங்களாக இப்படியே தொடர்ந்து அந்த பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத அந்த சிறுமி எப்படியாவது  விவரத்தை யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்று தைரியத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.  அதன் பின்னர் முதலில் தனது தாயாரிடம் சென்று சொல்லிவிட்டு அழுதிருக்கிறார்.

 இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தாயார்,   பள்ளி நிர்வாகத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு இது பற்றி சொல்லி இருக்கிறார்கள். போலீசாரிடமும் சென்று புகார் அளித்துள்ளார்கள்.   புகாரின் அடிப்படையில் பியூன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆச்சரிய படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 354 ,354 ஏ, 354 டி மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.   அந்த மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு வீடியோ கால் செய்து ஆடைகளை கழற்ற சொல்லி வற்புறுத்தியும் வந்திருக்கிறார்.    இதனால் தகவல் தொழில்நுட்ப சட்டம் சட்ட பிரிவு 67 ஏ -ன் கீழ் வெளிப்படையான பாலியல் செயலை மின்னணு வழியில் வெளியிடுவது தடுப்பது போன்றவற்றிற்கு தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.  

 இந்த பியூன் பள்ளியில் இதே போன்று வேறு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறாரா என்பது குறித்தும் போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.