ஓய்வு பெற்ற ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை

 
b

தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.  வீட்டில் இருந்த நகை,  பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 பெங்களூருவில் வித்யாரண்யபுரா  காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தார் பிரசன்னகுமாரி.  ஓய்வு பெற்ற  ஆசிரியர் இவரின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம்.   சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  ஓய்வுக்கு பின் வித்யாரண்யபுராவில் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.  

m

 இந்த நிலையில் இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ப நபர்கள் பிரசன்ன குமாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.  வீட்டில் இருந்த நகை,  பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.   தகவல் அறிந்த வித்யாரண்யபுரா போலீசார் பிரசன்னகுமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பிரசன்னா குமாரியின் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பிரசன்னகுமாரி தனியாக வசிக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட நபர்களே இந்த செயலியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.  போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.